சீனாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்ட மதமா.. பெருகி வரும் தடுப்பு மையங்கள்..!!!
சீனாவில் உள்ள தடுப்பு மையங்களில் உய்குர் முஸ்லிம்களுடன், துருக்கி பேசும் முஸ்லிகளும் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் (China) லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் தடுப்பு மையங்களில் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் பல முறை வெளியாகியுள்ளது.
சீனாவில் ஜின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் பல லட்சம் உய்குர் முஸ்லிம்கள் பல ஆண்டு காலங்களாக உள்ளனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை ஏதுமின்றி முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
ஆனால் ''தீவிரவாதத்தை'' ஒழிக்கும் ஒரு முயற்சியாக உய்குர் இன முஸ்லிம்களுக்கு இங்கு, பயிற்சிகளுக்கு, கல்வி அறிவும் கொடுக்கப்படுவதாகவும். உய்குர் முஸ்லிம்கள் பலர் தாமாகவே முன்வந்து கலந்து கொள்வதாக சீனா கூறுகிறது.
ALSO READ | Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!
ஆனால், தடுப்பு மையங்களின் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவில், மிக அதிக அளிவில் இருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் நாம் நினைத்ததை விட மிக அதிக அளவாக, சுமார் 380 தடுப்பு மையங்கள் உள்ளதாக அந்த பத்திரிக்கையின் ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் உய்குர் முஸ்லிம்களுடன், துருக்கி பேசும் முஸ்லிகளும் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
சாடிலைட் படங்கள், நேரில் பார்த்தவர்கள் கூறும் தகவல்கள், பத்திரிக்கை செய்திகள் ஆயவற்றில் அடிப்ப்டையில், 2019 ஜூலை முதல் 2020 ஜூலை வரை 61 தடுப்பு மையங்கள் புதிதாக கட்டுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் 14 தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பு மையங்கள் அனைத்தும் ஜின் ஜியாங் மாகாணத்தில் உள்ளன.
கட்டாயபட்டுத்தப்பட்டு கூலி வேலைக்கு மக்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற குற்றசாட்டின் பேரில், சமீபத்தில் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜின் ஜியாங் மாகாணத்தில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால், அவை தடுப்பு மையங்கள் அல்ல எனவும், இஸ்லாமை சேர்ந்தவர்களுக்கான கல்வி திட்டம், வேலை தொடர்பான திட்டம் ஆகியவற்றை அமல் படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்கள் எனவும் சீன கூறி வந்தது.
ALSO READ | நிரந்திர வெள்ளை மாளிகை வேந்தன் நான்... அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR