பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், உள்ளூர் மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் அரசு எதிர்கட்சிகளை இணக்க வைத்துள்ள போதிலும், உள்ளூரில் கிளம்பியுள்ள எதிர்ப்பினால், பாகிஸ்தான் அரசுக்கு மண்டை குடைச்சல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு (Jammu and Kashmir) வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசைப் போலவே, தானும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆசைப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
கில்கிட் பல்டிஸ்தான் சர்ச்சைக்குரிய பகுதி என்பதால், பாகிஸ்தான் அரசு, எந்த வித நடவடிக்கையையும் செயல்படுத்தும் முன், உள்ளூர் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கில்கிட் பல்டிஸ்தானில், இப்போது வரி எதுவும் கிடையாது. அதோடு, கோதுமை மற்றும் பெட்ரோல் பொருட்களுக்கு அரசு மானியங்களையும் வழங்குகிறது. இதனால், கில்கிட் பல்டிஸ்தானை ஐந்தாவது மாகாணமாக இணைத்தால் ,இந்த சலுகைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என உள்ளூர் மக்கள் அஞ்சுகின்றனர்.
சீனாவின் அறிவுறுத்தலில் பேரில் தான் பாகிஸ்தான் அரசு இவ்வாறு செயல்படுகிறது என உள்ளூர் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் அரசு, இந்திய அரசை போல் அதிரடியாக செயல்பட நினத்தது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR