தெஹ்ரான்: ஈரானில், ஒரு மகள் தாயைத் தன கையினாலேயே  தூக்கிலிட்டாள். அந்தப் பெண்ணுக்கு  கண்ணுக்கு கண் என்ற வகையில் 'பழிக்கு பழி' சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தப் பெண் தனது கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், மரியம் கரிமி  (Maryam Karimi)  என்ற  அந்த பெண்ணை, அவர்து மகளே மத்திய சிறையில் தூக்கிலிட்டார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு மரியம் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரியம் கரிமி (Maryam Karimi) தனது கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கணவரின் சித்திரவதையை சகித்துக் கொள்ள முடியாத மரியம், கணவரிடம் விவாகரத்து கேட்டும் விவாகரத்து கொடுக்க அந்த கணவர் தயாராக  இல்லை. 


ALSO READ | North Korea: ஆபாச படம் பார்த்த சிறுவனையும் குடும்பத்தையும் நாடு கடத்திய Kim Jong Un ...!!!

இந்நிலையில்,  மரியம் கரிமி, அவரது தந்தை ஆபிரகாமுடன் சேர்ந்து தனது கணவரை படுகொலை செய்ததாக தண்டணை விதிக்கப்பட்டது. ஆபிரகாமும் தூக்கிலிடப்பட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. திட்டமிட்ட கொலைக்காக மரியம் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஈரானில் (Iran)  'கிசாஸ்' (Qisas) என்று அழைக்கப்படும் 'கண்ணுக்கு கண்', அதாவது ரத்தத்திற்கு ரத்தம் என்ற வகையில் தண்டனை வழங்கும் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.


கிசாஸ் சட்டத்தின் கீழ், குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆஜராக அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தச் சட்டத்தின் கீழ், இளைய வயதான குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்குவதற்கான கொடூரமான அம்சம் உள்ளது. மரியம் கிரிமி வழக்கு, ஈரானின் கடுமையான சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. 


மனித உரிமை அமைப்புகள் இதை கடும் கண்டனம் செய்துள்ளன. அது நீதி அல்ல, மிகவும் கொடுமையானது என்று கூறியுள்ளது. மரியமின் மகள் தனது தாயார் செய்த குற்றத்திற்காக அவருக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். அதனால் அவளால் தன் தாயை மன்னிக்க முடியவில்லை. மரியமின் மகள் தன் தந்தையை கொலை செய்ததற்காக தாயை மன்னிக்க மறுத்துவிட்டாள்.


ALSO READ | இலங்கை எதிரான போர் குற்ற தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR