இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுகிறது - IAEA

இரான் யுரேனியத்தை 20% ஆக வளப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதை ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) உறுதிப்படுத்துகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 12:06 AM IST
  • இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுகிறது
  • 2018ஆம் ஆண்டில் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது
  • இரானுக்கு பல தடைகளையும் டிரம்ப் விதித்தார்
இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுகிறது - IAEA title=

இரான் யுரேனியத்தை 20% ஆக வளப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதை ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) உறுதிப்படுத்துகிறது. யுரேனியத்தை 20 சதவீத அளவிற்கு செறிவூட்டத் தொடங்கி இருப்பதாகவும், நிலத்தின் கீழ் அமைந்துள்ள Fordow உலையில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளதாக இரான் அறிவித்தது.

"ஈரான் இன்று ஃபோர்டோ (Fordow facility) எரிபொருள் செறிவூட்டல் ஆலையில் 4.1 சதவிகிதம் யு -235 வரை ஆறு சென்ட்ரிஃபியூஜ் அடுக்குகளாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Uranium) 20 சதவிகிதம் வரை செறிவூட்டத் தொடங்கியது" என்று ஐ.ஏ.இ.ஏ தெரிவித்துள்ளது.

செறிவூட்டல் செயல்முறைக்கு சில நாட்களுக்கு முன்னர் இரான் அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் (Iran) முடிவு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து "கணிசமான விலகல்" என்று ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது.

"சில நிமிடங்களுக்கு முன்பு, ஃபோர்டோ செறிவூட்டல் வளாகத்தில் 20% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் செயல்முறை தொடங்கியுள்ளது" என்று ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபே தெரிவித்தார். 

Also Read | தனித் தீவில் தனிமையில் 7 நாட்கள் Movies பார்க்க விருப்பமா?

ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக உள்ள பிரிட்டன், சீனா (China), பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி அமெரிக்கா என ஐந்து நிரந்தர உறுப்பினர்களுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஈரான். இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் 2018 ல் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதோடு இரானின் எண்ணெய் மற்றும் வங்கிக்கு பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு, முன்னர் ஈரான் ஐரோப்பிய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது, ஆயினும், யுரேனியத்தை செறிவூட்டுவது தொடர்பான மேம்பட்ட மையவிலக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஐ.ஏ.இ.ஏவுக்குத் தெரிவித்ததால், இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய நாடுகள் பின்வாங்கத் தொடங்கின.

யுரேனியம் செறிவூட்டல் பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அது இரண்டு புதிய மேம்பட்ட மையவிலக்குகளை உருவாக்கியுள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டில் ஈரான் ஐ.ஏ.இ.ஏ-க்கு தெரிவித்தது.

Also Read | குழந்தை பெற்றுக் கொண்டால் பணத்தை அள்ளிக் கொடுக்கும் நாடு எது தெரியுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News