காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த கொடிய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இராணுவம் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்  பயங்கரவாத அமைப்பின் மீது குண்டு வீசி தாக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 169 ஆப்கானியர்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்கொலைப்படை வெடிகுண்டு சுமார் 25 பவுண்டுகள் வெடிபொருட்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.


விமான நிலைய வாயிலும், விமான நிலையத்திற்கு வெளியேயும்  இருந்த அமெரிக்க துருப்புக்களையும், குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.


ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் சிக்கியுள்ளதால், அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. உல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.


1996 மற்றும் 2001 க்கு இடையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. மிகவும் மோசமான காலகட்டமாக அது இருந்தது. தற்போது தாலிபன்களின் கை மீண்டும்  ஓங்கிய நிலையில், அங்குள்ள ஆப்கான் மக்கள் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்பி, வெளிநாடு செல்ல, விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.


காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.


ALSO READ | காபூல் விமான நிலையத்தில் நுழைந்த தாலிபான்கள், இராணுவ பொறுப்பிலும் பயங்கரவாதிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR