அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ! ஜன்னல் வழியே குழந்தையை தூக்கி எறிந்த தந்தை!!
அமெரிக்காவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க 3 வயது மகனை ஜன்னல் வழியே தூக்கி எறிந்துவிட்டு தானும் கீழே குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் தெற்கு ப்ரவுண்ஸ்விக் நகரில் உள்ள 24 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒன்றில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. 2-வது மாடியிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்த நபரும், அவரது 3 வயது குழந்தையும் தீயில் சிக்கினர். வீடு முழுவதும் தீப்பிடித்த நிலையில், அவர்கள் பூட்டிய அறைக்குள் இருந்ததால் தீயில் சிக்கவில்லை. எனினும், சிறிது நேரத்திற்குள் அறைக்குள்ளும் தீ பரவிவிடும் என்பதால் விரைந்து இருவரையும் மீட்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்கு அறையின் ஜன்னல் வழியாக இருவரையும் மீட்பது மட்டுமே ஒரே வழி என்பதை மீட்புப்படையினர் உணர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கட்டடத்தில் அடியில் நின்றிருந்த மீட்புப்படையினர் குழந்தையை கீழே வீசுமாறு அதன் தந்தையிடம் வற்புறுத்தினர். முதலில் யோசித்த அவர் வேறு வழியின்றி குழந்தையை கீழே வீசினார். கீழே நின்றிருந்த மீட்புப்படையினர் குழந்தையை லாவகமாகப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தையின் தந்தையும் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
மேலும் படிக்க | அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - மூள்கிறதா மூன்றாம் உலகப்போர்?
இந்த காட்சிகள் அனைத்தும் மீட்புப்படையினரின் ஆடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளன. காண்போரை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை தெற்கு ப்ரவுண்ஸ்விக் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குழந்தையைக் காப்பாற்ற மீட்புப்படையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR