அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - மூள்கிறதா மூன்றாம் உலகப்போர்?

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Mar 13, 2022, 12:45 PM IST
  • அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
  • சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகள்
  • மூள்கிறதா மூன்றாம் உலகப்போர்?
அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - மூள்கிறதா மூன்றாம் உலகப்போர்? title=

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்றுடன் 18-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கும் என உக்ரைன் அரசு எதிர்பார்த்தது. அப்படி நடந்தால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதோடு நிறுத்திக்கொண்டன. மறுபக்கம் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை தொடர்ந்து அந்நாடுகள் விதித்து வருகின்றன. 

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கினால், அந்த நாடுகள் நேரடியாக போரில் பங்கெடுத்ததாகவே கருதப்பட்டு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இருப்பினும் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதோடு, ஆயுத உதவிகளும் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீப நாட்களாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இதனால் உக்ரைன் - ரஷ்யா மோதல் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதலாக மாறிவிடும் அபாயங்கள் அதிகரித்து வந்தன. இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவை ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

Iraq

மேலும் படிக்க | மரியுபோல் மீது கடும் தாக்குதல்! கீவ் அருகே மோதல் தொடர்கிறது

தாக்குதல் நடைபெற்ற தூதரகம் புதிதாக கட்டப்பட்டது என்றும், அலுவலகம் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக ஈராக் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஈராக்கின் இறையாண்மைக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது வன்முறையின் வெளிப்பாடு எனவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Map

மேலும் படிக்க | ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை! சவூதி அரேபியாவின் கடுமையான தண்டனை...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ஆதரித்து ஐ.நா. சபையில் வாக்களித்த ஐந்து நாடுகளில் ஈரானும் ஒன்று. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை அமெரிக்கா பகடைக்காயாகப் பயன்படுத்துவது போல் அமெரிக்காவுக்கு எதிராக ஈரானைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிடுகிறதோ எனும் சந்தேகங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன. ஒருவேலை இது நடந்தால் அது மூன்றாம் உலக்கப்போருக்கான அச்சாரமாகி விடும் என்பதால் ரஷ்யா - உக்ரைன் இடையிலான பிரச்சனை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News