அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னதாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இது வரை 6 கோடியே 95 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு தேர்தலில், தேர்தலுக்கு முன் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட இது மிக அதிகமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர்3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் (US Presidential election) நடைபெற உள்ளது, தேர்தல் நடக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில்தேர்தல் இதுவரை 6 கோடியே 95 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2016 ல் பதிவான தேர்தலுக்கு முந்தையை மொத்த வாக்குகளில் 50.4 சதவீதமாகும்.


அமெரிக்க வாக்காளர்கள் அதிபர் டிரம்ப் (Donald Trump), அஞ்சல் வாக்கு விஷயத்தில் தெரிவித்த எதிர்ப்பை வாக்காளர்கள் மூலம் நிராகரித்துள்ளனர் என சிலர் கருத்து கூறியுள்ளனர்.  இருப்பினும் நாட்டில் தொற்றுநோய் பரவல் காரணமாக தேர்தலுக்கு முந்தைய அஞ்சல் வாக்குச்சீட்டு பதிவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


வட கரோலினா மற்றும் புளோரிடாவில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | புல்வாமா தாக்குதல் இம்ரான் கானின் மிகப்பெரிய வெற்றி: பாக். வெளியுறவு அமைச்சர்


கருப்பின மக்கள் அதிகம் இருக்கும் டெக்சாஸிலும்,  ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக உள்ளது, அங்கு 73 லட்சம் மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். ஆரம்பகால வாக்களிப்பு மந்தமாக இருந்த மாநிலங்களில், டிரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கருதப்படுகின்றன. இந்த மாநிலங்களில் டென்னசி, இந்தியானா, லூசியானா, உட்டா மற்றும் கன்சாஸ் போன்றவை அடங்கும். பிடெனுக்கு (Joe Biden) கலிபோர்னியா, நியூ ஜெர்சி, வர்ஜீனியா, இல்லினாய்ஸ், ஹவாய் போன்றவற்றில் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.


சிறு தொழில்களுக்கு உதவுவம் திட்டத்தினாலும், இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தியுள்ளதாலும், ட்ரம்பிற்கு சீக்கிய சமூகம்  ஆதரவு அதிகம் உள்ளது. விஸ்கான்சின் மில்வாக்கியில் ஒரு முக்கிய தொழிலதிபரும், சீக்கிய தலைவருமான தர்ஷன் சிங் தலிவால் கூறுகையில், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்பின் காரணமாகவும், அவருக்கு என ஆதரவு அதிகம் உள்ளது என்றார். கமலா ஹாரிஸ் இந்தியராக இருந்தாலும் இந்தியாவுக்கு எதிரானவர் என அவர் கூறினார்.


மேலும் படிக்க | பிரான்சில், அல்லாஹு அக்பர் என பெண்ணின் கழுத்தை வெட்டிய பயங்கர சம்பவம்..!!!


முன்னதாக, அதிபர் வேட்பாளர் பிடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் அதிபர்  பராக் ஒபாமா (Barack Obama) தனது வாரிசு வெள்ளை மாளிகையை, ட்ரம்ப் கோவிட் மையமாக மாற்றியதாக குற்றம் சாட்டினார்.  கோவிட் -19  பரவலை அவர் சரியாக கையாளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR