பிரான்சில், அல்லாஹு அக்பர் என பெண்ணின் கழுத்தை வெட்டிய பயங்கர சம்பவம்..!!!

பிரான்சில் இரு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில்,  நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பட்ட பகலில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 29, 2020, 07:36 PM IST
  • பிரான்சில் இரு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பட்ட பகலில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
  • பிரான்சின் நைஸ் நகரத்தில் தேவாலயத்திற்கு அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஒரு பெண் தலை வெட்டி கொல்லப்பட்டார்.
பிரான்சில், அல்லாஹு அக்பர் என பெண்ணின் கழுத்தை வெட்டிய பயங்கர சம்பவம்..!!!

பிரான்சில் இரு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில்,  நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பட்ட பகலில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று, பிரான்ஸில் (France) தேவாலயத்திற்கு அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 'அல்லாஹ் ஹு அக்பர்' என்று கோஷமிட்டபடியே, பெண்ணின் கழுத்தை வெட்டிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இறந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவர். தாக்குதல் நடத்தியவர்  ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS)  பாணியில், தலையில் துண்டித்துள்ளார். தாக்குதலின் போது, ​​தாக்குதல் நடத்தியவர் அல்லாஹ் ஹு அக்பர் என கத்திக் கொண்டே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ALSO READ | பிரான்சில் வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூனை காண்பித்த ஆசிரியர் தலை வெட்டி கொலை ..!!!

பிரான்சின் தலைநகரான பாரிஸில் உள்ள பள்ளியில் ஆசிரியர் சாமுவேல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்த ஆசிரியரின் தவறு என்னவென்றால், அவர் கருத்து சுதந்திரம் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது முகமது நபி அவர்களின் கார்ட்டூனைக் காட்டியது தான்.

ஜூலை 2016 இல் பிரான்சின் இதே நைஸ் நகரில், தேசிய தின கொண்டாட்டத்தின் போது, ஒரு பயங்கரவாதி லாரியில் வந்து மக்கள் மீது ஏற்றியதில், 80 பேர் கொல்லப்பட்டனர்.

ALSO READ | Islamophobia: ஒரே பதிலில் பாகிஸ்தானின் வாயை அடைத்த பிரான்ஸ் அதிபர்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News