E-Visa Services To Canadian: கனடா நாட்டை சேர்ந்த குடிமக்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இதுத்தொடர்பாக ஏஎன்ஐ ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. கனடா குடிமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக இ-விசா வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா குடிமக்களுக்கான மின்னணு விசா சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக செப்டம்பரில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்த பதட்டங்கள் மற்றும் இரு நாடுகளிலிருந்தும் தூதரக அதிகாரிகள் வெளியேற்றங்களை என அடுத்து அடுத்து நடந்த செயல்பாட்டு காரணங்களால் கனடா நாட்டு மக்களுக்ளுக்கான விசா சேவையை செப்டம்பர் 21 அன்று இந்தியா நிறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பிரதமர் - கனடா பிரதமர் மீண்டும் சந்திக்க உள்ளனர்


பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஜி-20 மாநாட்டின் மெய்நிகர் கூட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்கவிருக்கும் நேரத்தில் இந்தியா இ-விசாவை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சந்திப்புக்கு முன் இந்தியா எடுத்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மீண்டும் சீரான பாதையில் கொண்டு வருவதற்கான சாதகமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



இந்தியா மற்றும் கனடா இடையே விரிசல் வரக்காரணம் என்ன? 


கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கனடா வான்கூவரில் ஒரு சீக்கிய பிரிவினைவாதி தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டார். இதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டியதில் இருந்து கனடா மற்றும் இந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் பயங்கரவாதக் குற்றங்கள் மற்றும் குண்டு வெடிப்பு, கொலை சதி செயல்களில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த கனடா குடிமகன் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இன்ஹ்டியா மறுத்தது. அதேநேரத்தில் கனடா "தீவிரவாதம் மற்றும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு" ஒரு தளமாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை கனடா அரசு எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


மேலும் படிக்க - இந்தியா கனடா மோதல்: அடிவாங்கும் பொருளாதாரம், கண்டுகொள்ளாத அமெரிக்கா.... குழம்பும் கனடா!!


இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற கனடா அரசு, இந்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை கனடா நாட்டில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய அரசும் கனடா நாட்டு தூதரக அதிகாரி வெளியேற உத்தரவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதித்தது. மேலும் விசா சேவை இடைநிறுத்துதல், தொடர் தூதரக அதிகாரி வெளியேற்றும் நடவடிக்கைகள் காரணமாக இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்தது.  


யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?


1990-களின் நடுப்பகுதியில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த பின்னர் 2015 இல் கனடா குடியுரிமை பெற்ற நிஜ்ஜார், ஜூன் மாதம் சர்ரேயின் வான்கூவர் புறநகரில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.


காலிஸ்தான் இயக்கம்


காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் அதன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்திருந்தாலும், சீக்கிய புலம்பெயர்ந்தோர் மத்தியில் அது தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 மேலும் படிக்க - India Vs Canada: இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்து 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற கனடா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ