மாஸ்கோ: ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுடனான நட்பை முறித்துக் கொள்ள இந்தியா மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும், இந்தியா தனது வரலாற்று உறவுகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இன்று இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் அளவிற்கு உறவு நிலை வலுவாக உள்ளது. உக்ரைன் போர் நடந்த போதிலும், S-400 ஏவுகணை அமைப்புகளின் மூன்று படைப்பிரிவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. கமோவ் கா-226 ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இது தவிர, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் வழியாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் வரை புதிய போக்குவரத்து வழித்தடத்தை அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமின்றி விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரம் அமைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை உருவாக்கவுள்ள இந்தியா 


ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விளாடிவோஸ்டாக் அருகே செயற்கைக்கோள் நகரத்தை உருவாக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் தூர கிழக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நகரத்தில் துறைமுகம், சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா விரும்புகிறது. விளாடிவோஸ்டாக்கில் இந்தியாவின் இருப்பில் ரஷ்யாவும் ஆர்வமாக உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கை சீனாவும் உரிமை கொண்டாடுகிறது. மாஸ்கோவும் புது தில்லியும் வடக்கு கடல் பாதையில் (என்எஸ்ஆர்) டிரான்ஸ்-ஆர்க்டிக் கொள்கலன் கப்பல் பாதை மற்றும் செயலாக்க வசதிகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து வருகின்றன என்று ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஆர்க்டிக் வளர்ச்சிக்கான அமைச்சர் அலெக்ஸி செக்குன்கோவ் தெரிவித்தார்.


மேலும் படிக்க | தாய்நாட்டை விட பெரியது எதுவுமில்லை... வெற்றி தினத்தின் முழங்கிய அதிபர் புடின்!


ரஷ்ய அமைச்சரின் இந்திய பயணத்தின் போது விவாதிக்கப்பட்டது


செக்குன்கோவ் மார்ச் மாதம் தனது இந்திய விஜயத்தின் போது இந்த திட்டங்களை விவாதித்தார். இதன் போது, ​​இந்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலையும் சந்தித்து பேசினார். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சரக்கு போக்குவரத்துக்கான மாற்று வழி குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இதன் போது இந்தியா மற்றும் ரஷ்யாவின் துறைமுகங்களைப் பயன்படுத்தி கிழக்கு நீர்வழியின் மூலம் வர்த்தகம் செய்வது குறித்து பேசப்பட்டது. இந்தியாவிலிருந்து விளாடிவோஸ்டாக்கிற்கு ஒரு கொள்கலனை அனுப்புவதற்கான செலவு மாஸ்கோவை விட 30% குறைவு.


இந்தியா-ரஷ்யா வர்த்தகம் அதிகரிக்கும்


சூயஸ் அல்லது பனாமா கால்வாய்கள் மூலம் வர்த்தகம் செய்வதோடு ஒப்பிடுகையில், ஆர்க்டிக் பாதையானது அதிக நேரத்தை மிச்சப்படுத்தும். தெற்காசியாவை ஐரோப்பாவுடன் நேரடியாக இணைக்க முடியும். சோவியத் காலங்களில் இது முக்கியமாக ஆர்க்டிக்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு பொருட்களை வழங்க பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு, ரஷ்யா தனது ஆற்றல் கொள்முதல் மீதான G-7 விலை வரம்புக்கு மத்தியில் ரஷ்ய எண்ணெய்க்கான காப்பீடாக பெரிய கொள்ளளவு கொண்ட கப்பல்களை உருவாக்க மற்றும் குத்தகைக்கு இந்தியாவிற்கு வழங்கியது. 2021 ஆம் ஆண்டில், இந்தியாவும் ரஷ்யாவும் சிவில் கப்பல் கட்டுமானத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்தன.


உலகில் எந்த இரு நாடுகளுக்கிடையேயான சிறந்த நட்புறவுக்கு உதாரணம் என்றால் அதற்கு இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு என்றால் மிகையில்லை. கடந்த ஆண்டு உக்ரைன் போர் வெடித்த போது, ​​பாதிக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பின. ஆனால் இந்தியாவுடனான ரஷயாவின் உறவுகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | FATF கருப்பு பட்டியலில் இணைந்தால்... இந்தியாவை எச்சரிக்கும் ரஷ்யா..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ