மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியைக் குறிக்கும் நாளை வெற்றி நாள் ஆண்டுதோறும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று ரஷ்யா கொண்டாடிவருகிறது. நாளை இந்த வெற்றி தினத்தை அனுசரிக்கும் ரஷ்யா, அதற்காக பிரம்மாண்டமான அணிவகுப்பை நடத்துகிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மே 9ம் தேதி வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவப்பு சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அணிவகுப்பில், அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளை கடுமையாக தாக்கினார். உலகம் தற்போது ஒரு திருப்புமுனையை கடந்து வருவதாக புடின் கூறினார். ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் போர் தொடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். புடினின் இந்த பேச்சு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உரைக்குப் பிறகு நிகழ்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, நாசிசத்தைப் போலவே ரஷ்யாவும் அழிக்கப்படும் என்று ஜெலென்ஸ்கி சபதம் செய்தார்.
மேலும் படிக்க | ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டங்கள்! இரண்டாம் உலக போர் நினைவு தினத்தில் உக்ரைன் போர்
ரஷ்யாவை தாக்க தயாராகும் மேற்கத்திய நாடுகள்
நாசிசத்திற்கான பாதையை மேற்கத்திய நாடுகள் தயார் செய்து வருவதாக அதிபர் புடின் கூறினார். ரஷ்யா மீது புதிய தாக்குதலுக்கு தயாராகி வரும் மேற்கத்திய நாடுகள், இரண்டாம் உலகப் போரின் முடிவுகளை மறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதன் போது, ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பிற குடிமக்களுக்கு புடின் வாழ்த்து தெரிவித்தார். இம்முறை 78வது வெற்றி தின அணிவகுப்பு. இரண்டாம் உலகப் போரின் வெற்றியைக் கொண்டாட ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்பை நடத்துகிறது. போர் தொடுப்பதும் பாரம்பரிய விழுமியங்களை அழிப்பதும் மேற்கத்திய நாடுகளின் பழக்கமாகிவிட்டது என்று புதின் கூறினார். மேற்கத்திய நாடுகள் தங்கள் சர்வாதிகாரத்தை நடத்தவும், கொள்ளையடிக்கவும், வன்முறையை நடத்தவும் இதைச் செய்கின்றன என்று அதிபர் புதின் அணிவகுப்பில் கூறினார்.
தாய்நாட்டை விட பெரியது எதுவுமில்லை
வெற்றி தின உரையின் போது புடின் கூறுகையில், 'ரஷ்யாவின் 78வது வெற்றி தினத்தை முன்னிட்டு அந்நாட்டு குடிமக்கள், வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகள். தங்கள் தாய்நாட்டைக் காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நம் முன்னோர்களின் நினைவாக இன்று கொண்டாடப்படும் இந்த வெற்றி தினத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இதன் பின்னர் புடின் மேலும் கூறுகையில், 'இன்று மீண்டும் மனித நேயமும் மனித நாகரிகமும் ஆபத்தில் உள்ளன. ஒரு யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதத்தில் இருந்து டான்பாஸ் பகுதியில் உள்ள எல்லைகளை ரஷ்ய படைகள் பாதுகாத்து வருவதாக புடின் கூறினார். உலகில் எந்த இராணுவமும் தாய்நாட்டின் மீதான அன்பின் சக்திக்கு ஈடு இணையில்லை என்று புடின் கூறினார்.
ஜெலென்ஸ்கி விடுத்த சவால்
முன்னதாக திங்கட்கிழமை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ரஷ்யாவுக்கு சவால் விடுத்துள்ளார். நாசிசம் தோற்கடிக்கப்பட்டது போலவே ரஷ்யாவும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அவர் சபதம் செய்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி இராணுவம் எவ்வாறு மோசமாக தாக்கப்பட்டது என்பதை விலோடிமிர் ஜெலென்ஸ்கி (Vlodimir Zelensky) நினைவு கூர்ந்தார். ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு ஜெலென்ஸ்கியின் அறிக்கை வந்தது. சமீபத்தில், ரஷ்யாவின் மிக ஆபத்தான கின்சல் ஏவுகணையை அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது. முன்னதாக, உக்ரைன் அதிபர் புடினை ஆளில்லா விமானம் மூலம் கொல்ல சதி செய்ததாக ரஷ்யா கூறியது.
ரஷ்யாவில் வெற்றி தின நாள் கொண்டாட்டத்தின்போது, மாஸ்கோவில் உள்ள ரெட் ஸ்கொயர் என்ற சதுக்கத்தில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் இடம்பெறும். அணிவகுப்பைத் தொடர்ந்து வீரர்களின் சமாதியில் மலர்வளையம் வைத்து, வாணவேடிக்கை மற்றும் பிற விழாக்கள் நடைபெறும்.வெற்றி நாள் கொண்டாட்டங்கள் மாஸ்கோவில் மட்டுமல்ல, ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கணிசமான ரஷ்ய மக்கள்ச்தொகை கொண்ட பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.ச்இரண்டாம் உலகப் போரின் போது மக்கள் செய்த தியாகங்களைப் பற்றி சிந்தனை மற்றும் உயிர்களை இழந்த மில்லியன் கணக்கான மக்களை நினைவில் கொள்வதற்கான நாளாக வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ