அமெரிக்க அதிபர் தேர்தல் 2024... களம் இறங்கும் விவேக் ராமசாமி - நிக்கி ஹேலி!
US Presidential Election: அமெரிக்காவில் அடுத்த ஆண்டுடன் தற்போதைய அதிபர் பதவிக்கான காலம் முடிவடைகிறது. இதனால், அடுத்த ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அவர்களில் இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதை அடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஏற்கனவே சூடுபிடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செவ்வாய்க்கிழமை தனது 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த அறிப்பை வெளியிட்டு, தனது துணை கமலா ஹாரிஸுடன் அதற்கான பிரச்சாரத்தை தொடங்கினார், மேலும் " தொடங்கிய வேலையை முடிக்கவும்", ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இன்னும் நான்கு ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு அமெரிக்கர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர்களின் 2020 குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்புடன் மீண்டும் போட்டியிட தயாராகி வருகிறார் ஜோ பைடன்.
ஜோ பிடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் தவிர, அடுத்த ஆண்டு 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகிய இரு இந்திய வம்சாவளி வேட்பாளர்களையும் களத்தில் காணலாம். ஹேலி மற்றும் ராமசாமி இருவரும் குடியரசுக் கட்சியில் இருந்து போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களாக இருக்க கூடும்.
யார் அந்த விவேக் ராமசாமி
இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, 2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த பிப்ரவரி 22ம் தேதி அறிவித்தார். விவேக் ராமசாமி ஒரு அமெரிக்க தொழிலதிபர். 37 வயதில் அடுத்த ஆண்டுக்கான இளைய ஜனாதிபதி வேட்பாளர் ராமசாமி ஆவார். அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட விவேக் ராமசாமிக்கு குடியரசுக் கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம்! களம் இறங்க தயாராகும் ஜோ பைடன்!
ராமசாமி ஓஹியோவின் சின்சினாட்டியில் பிறந்து வளர்ந்தார். இவருடைய பெற்றோர் இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு வடக்கஞ்சேரியில் இருந்து குடியேறியவர்கள். கேரளாவில் உள்ள உள்ளூர் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, அவரது தந்தை வி.ஜி. ராமசாமி, ஓஹியோவின் ஈவென்டேலில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் ஆலையில் பணிபுரிந்தார். சின்சினாட்டியின் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ராமசாமி 2003ம் ஆண்டில் டிப்ளோமா பெற்றார். கல்லூரியில் சிறந்த மாணவராகவும், வகுப்பில் முதல் மாணவராகவும் விளங்கிய அவர் , தேசிய அளவில் ஜூனியர் டென்னிஸ் வீரராகவும், உயர்நிலைப் பள்ளியில் திறமையான பியானோ கலைஞராகவும் இருந்தார்.
யார் அந்த நிக்கி ஹேலி
நிக்கி ஹேலி ஒரு விசுவாசமான குடியரசுக் கட்சியை சேர்ந்த நபர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 51 வயதில், அவர் தனது இளமைப் பருவத்தைப் பயன்படுத்தி 80 வயதில் வரலாற்றில் மூத்த அமெரிக்க அதிபரான ஜோ பிடனுக்கு எதிராக நிற்க உள்ளார். நிக்கி ஹேலி இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிய தம்பதிகளின் மகள். அவர்கள் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள். அவரது பெற்றோர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் - ராபர்ட் கென்னடி ஜூனியர், மரியன்னே வில்லியம்சன், ஆசா ஹட்சின்சன் மற்றும் ரான் டிசாண்டிஸ்.
மேலும் படிக்க | உயிரிழந்த 2 மணி நேரத்தில் நடந்த வியப்பான சம்பவம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ