ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மெகா டிராவில் வெற்றி பெற்ற இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட், மாதந்தோறும் 5.5 லட்சம் ரூபாய் என்ற தொகையை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு அவர் பெறுவார். இந்த லாட்டரி முடிவுகள் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் 38 வயதான இந்திய கட்டிடக் கலைஞர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மெகா பரிசு டிராவில் முதல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதிலும், அவருக்கு ஒட்டுமொத்தமாக ஒரு தொகை அல்ல, தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5.5 லட்சம் தொகை வந்துக் கொண்டிருக்கும். 


துபாயில் ஐந்து ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் உத்தரபிரதேச மாநிலம் அசம்கரை சேர்ந்த முகமது அடில் கான், எமிரேட்ஸ் டிராவின் 'ஃபாஸ்ட் 5' விளையாட்டில் முதல்முறையாக பங்கேற்று வெற்றி பெற்றதாக தி கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 
 
'என்னால் நம்பவே முடியவில்லை'


வெற்றி பெற்றதைத் தெரிவிக்கும் வாழ்த்து மின்னஞ்சலைப் பார்த்ததும் தனக்கு ஆச்சரியம் ஏற்பட்டதாக, என்.ஆர்.ஐ முகமது அடில் கான் வியப்பு தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரை சேர்ந்த அவர், லாட்டரி அமைப்பாளர்களிடமிருந்து அழைப்பு வந்ததும், முதலில் அதை நம்ப முடியவில்லை. பிறகு அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதும் தான் புரிந்தது என்று அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ 75 லட்சம்..யார் அந்த அதிர்ஷ்டசாலி?


ஓய்வு பெற முடிவு
நான் வேலை செய்யத் தேவையில்லை, பணி ஓய்வு பெறலாம் என்று உணர்ந்தேன், என் எதிர்காலம் பாதுகாப்பானதாகிவிட்டது. நான் முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டேன் என்று நினைக்கிறேன். பென்ஷன் வருவது போல, மாதம் ஐந்தரை லட்சம் ரூபாய் என 25 ஆண்டுக்கு வந்தால், ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் சரியானது என அவர் நினைக்கிறார்.


எமிரேட்ஸ் டிரா
எமிரேட்ஸ் டிரா ஃபாஸ்ட் 5 என்ற விளையாட்டை சுமார் 8 வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது, அதில் இந்தியர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.


குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர்
கோவிட் நோயால் தனது சகோதரர் இறந்த பிறகு குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரான கான், தனது முழு குடும்பத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அழைத்து வந்து, தனது மருமகன்களை இங்குள்ள பள்ளிகளில் சேர்க்க விரும்புவதாகக் கூறுகிறார்.


தி கலீஜ் டைம்ஸிடம் பேசிய கான், “இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல. எனது குடும்பத்தில் உள்ள அனைவரின் பிரார்த்தனையால் தன் இது சாத்தியமானது, எல்லாம் வல்ல இறைவன் தனது ஆசீர்வாதத்தை எங்கள் மீது வைத்திருக்கிறார். இந்தத் தொகை நண்பர்கள் மற்றும் உறவினர்கள், நலன் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் சென்று சேரும் என்றார்.


வெற்றி எண்களைத் தேர்ந்தெடுத்து விளையாடுவதற்கான உத்தி பற்றி கானிடம் கேட்டபோது, ​​'நினைவில் தோன்றியதைத் தேர்ந்தெடுங்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எதைச் செய்தாலும் அதில் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | கேரள மான்சூன் பம்பர் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு வென்ற 11 மாநகராட்சி தொழிலாளிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ