மலப்புரம்: 10 கோடி மதிப்புள்ள கேரளாவின் மான்சூன் பம்பர் லாட்டரியை வென்ற 11 பெண் குடிமைப் பணியாளர்களும் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 பெண் நகராட்சி ஊழியர்கள், மாநில அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான மான்சூன் பம்பர் லாட்டரியின் ரூ.10 கோடி ஜாக்பாட்டை கூட்டாக வென்ற 11 பெண்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஹரித கர்மா சேனா, மாநில குடும்பஸ்ரீ மிஷன் பசுமைப் படையின் உறுப்பினர்கள், மக்காத குப்பைகளை வீட்டு வாசலில் இருந்து சேகரித்து, செயலாக்கத்திற்கு முன் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய தொகையை வென்ற அந்தப் பெண்களின் உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி அவர்கள் ஒரு கனவில் இருப்பதைப் போன்ற உணர்வை சந்தித்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி பேரூராட்சியைச் சேர்ந்த இந்தப் பெண்கள், லாட்டரி சீட்டை தனித்தனியாக பணம் இல்லாததால், 250 ரூபாய் டிக்கெட்டை கூட்டாக வாங்கியுள்ளனர். BR-92க்கான அதிர்ஷ்டமான டிரா டிக்கெட் MB200261 ஆகும். வருமான வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் கழித்த பிறகு, பணம் வெற்றியாளரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். வெற்றி பெற்ற டிக்கெட் பரப்பனங்காடியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட்டது.
10 கோடி ரூபாய் பெற்ற பெண்களின் கனவுகள் மிகவும் எளிமையானவை. இருக்கும் கடனை அடைதப்பது, வீடுகள் கட்டுவது, சீரற்று இருக்கும் வீடுகளை சீரமைக்க வேண்டும் என்பதே அவர்களின் சின்னச்சின்ன ஆசைகள். கோடீஸ்வரர்களாக மாறுவதில் மகிழ்ச்சி அடையும் பெண்கள், இவ்வளவு பணம் தங்களுக்குக் கிடைக்கும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லையாம்.
"நாங்கள் எதிர்பார்க்காத வகையில் ஜாக்பாட் பரிசு எங்களுக்கு கிடைத்தது. இதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்," என்று பெண் ஒருவர் கூறினார். "நாங்கள் அனைவரும் மிகவும் குறைந்த வருமானம் கொண்டவர்கள். லாட்டரியில் நான் வெல்லும் பணத்தில், எனக்கு இருக்கும் ரூ.3 லட்சம் கடனை அடைக்க எண்ணுகிறேன். இந்தக் கடன் சுமை எனக்கு மிகப் பெரிய இக்கட்டை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பணம் எங்களுக்குத் தகுந்த நேரத்தில் வந்தது.மகிழ்ச்சி என்று மற்றும் ஒரு பெண் சொல்கிறார்.
57 உறுப்பினர்களைக் கொண்ட ஹரித கர்மா சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஷீஜா கணேஷ் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். கடின உழைப்பாளிகளான இந்தப் பெண்கள், குப்பைகளை தரம் பிரித்து எடை போடுவது, வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிப்பது என தங்கள் கடமையை சரியாக செய்பவர்கள் என்று சொல்கிறார்.
இந்தப் பெண்களின் சராசரி மாத வருமானம் ரூ 8000 முதல் ரூ 14000 வரை இருக்குமாம். இப்போது, அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாத பெரியத் தொகை கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்கின்றனர்.
மான்சூன் பம்பர் இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சம் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் ஆகும். 1967 ஆம் ஆண்டு கேரள அரசால் நிறுவப்பட்ட கேரள மாநில லாட்டரி துறை, லாட்டரி முறையை இயக்கும் பொறுப்பை வகிக்கிறது. வாரந்தோறும் லாட்டரிகளை நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். தற்போது, ஏழு லாட்டரிகளை கேரள மாநில லாட்டரி துறை நடத்தி வருகிறது, திருவனந்தபுரத்தில் தினமும் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ 75 லட்சம்..யார் அந்த அதிர்ஷ்டசாலி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ