இந்தோனேசியாவில் சீரம் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு செய்யப்பட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓடி வந்தனர்.  எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.



நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா என இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.