மெக்சிகோ: மெக்சிகோவில் கடந்த வாரம் வெளிப்படுத்தப்பட்ட ஏலியன்ஸ் சடலங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், வேற்றுகிரகவாசிகளின் சடலங்களில் ஒன்று, மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்பதை கண்டறியும் விசாரணையின் ஒரு பகுதியாக, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஏலியன்ஸ் கண்காட்சியை நடத்திய மெக்சிகோ அரசு, 2 ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தப்படுத்தியது. இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்சிப்படுத்தப்பட்ட எலியன்களின் சடலங்கள், மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் இருந்தன. ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இவை இரண்டும் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையான சடலங்கள் இவை என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


நேற்று (செப்டம்பர் 19, செவ்வாய்கிழமை) மெக்சிகோ சிட்டியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இறுதியாக மம்மி செய்யப்பட்ட எச்சங்கள் எந்த வகையிலும் தயாரிக்கப்படவில்லை அல்லது சேதப்படுத்தப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியது, எனவே இந்த சடலங்கள் உண்மையானதாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.


Scientific Institute for Health of the Mexican navy நிறுவனத்தின் இயக்குனர் ஜோஸ் டி ஜீசஸ் சால்ஸ் பெனிடெஸ் இது குறித்து விளக்கமளித்தார். இந்த சடலங்கள், ஒரு எலும்புக்கூட்டைச் சேர்ந்தவை என்றும் அவை விலங்குகள் அல்லது மனித எலும்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும் கூறினார்.


மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள சூப்பர்நோவாவை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்!


ஆய்வக சோதனைகள், "மண்டை ஓடுகள் கூட்டப்பட்டதற்கான அல்லது கையாளப்பட்டதற்கான எந்த ஆதாரமும் சடலங்களில் இல்லை" "மற்ற துண்டுகளுடன் இணைக்கப்படாத ஒற்றை எலும்புக்கூட்டைச் சேர்ந்தவை அந்த சடலங்கள்" என்று அவர் கூறியதாக தி டெலிகிராப்  செய்தி வெளியிட்டுள்ளது.


அதில் ஒரு சடலம், உயிருடன் இருக்கும்போது கர்ப்பமாக இருந்தது என்றும் அனுமானங்கள் கூறப்பட்டன. அதற்கு காரணம் அந்த சடலத்தின் அடிவயிற்றில் உள்ள பெரிய கட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  நீளமான தலை, இரண்டு சாய்ந்த கண்கள் மற்றும் சிறிய தலைகீழான மூக்கு கொண்ட வேற்றுகிரகவாசிகளின் சடலங்களில் ஒன்றில், குழு சோதனைகளை மேற்கொள்வதைக் காட்டும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.


மெக்சிகோவில் ஏலியன்கள்? 


இவை வேற்றுகிரகவாசியின் சடலங்கள் என்ற கருத்தில் அறிவியல் சமூகம் இன்னும் பிளவுபட்டுள்ளது. கடந்த வாரம் மெக்சிகன் பத்திரிகையாளரும் யுஎஃப்ஒ ஆர்வலருமான ஜெய்ம் மவுசானால் காட்டப்பட்ட இரண்டு சடலங்களும் உண்மையானவை என்று விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமனதாக நம்பவில்லை.


மேலும் படிக்க | 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் சடலங்களை மக்களுக்கு காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு


பல யுஎஃப்ஒ மற்றும் தடயவியல் நிபுணர்கள் இந்த சடலங்களின் மீது சந்தேகம் எழுப்பியதுடன், இவை"ஆதாரமற்றவை" மற்றும் "புரளி" என்று சாடியுள்ளனர். இப்படிக் கூறியவர்களில் ஒருவரான, பிரிட்டிஷ் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ், இந்த சடலங்கள் வேற்றுகிரகவாசிகளுடையது என்பதை சுயாதீனமாக சரிபார்ப்பதற்காக உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான ‘23andMe’ க்கு அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.


"வேறொரு கிரகத்தில் உருவான ஒரு அறிவார்ந்த இனம், நம்மைப் போல தோற்றமளிக்கும் என்பது சாத்தியமில்லை" என்று அவர் கடந்த வாரம் கூறினார்.


பெரு அரசு விசாரணை
பெருவில் நாஸ்கா லைன்ஸ் அருகே கண்டெடுக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் எச்சங்கள் மவுசானின் வசம் எப்படி வந்தது என்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பெருவியன் அரசாங்கம், அவை ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய பொருட்கள் என்றும், உடல்கள் எப்படி நாட்டை விட்டு வெளியேறியது என்பது குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.


எவ்வாறாயினும், 70 வயதான மௌசன், தான் நிரபராதி என்றும், "முற்றிலும் சட்டவிரோதமான எதையும் செய்யவில்லை" என்றும் கூறியதுடன், எல்லாவற்றையும் "தகுந்த நேரத்தில்" வெளிப்படுத்துவேன் என்றார்.


மேலும் படிக்க | ஏலியன்கள் இருக்கிறார்களா... இல்லையா? - உண்மைகள் உடைக்கும் நாசாவின் அறிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ