NASA UFO Report: UAP (Unidentified Anomalous Phenomena) என்றழைக்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள், மேலும் குறிப்பாக, UFO (Unidentified Flying Object) என்றழைக்கப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஆகியவை உலகின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்று வரை விவாதத்திலேயே உள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வு
அனைவருக்கும் எளிதாக புரியம் பொது மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஏலியன்கள் இருக்கின்றதா, அவை நமது பூமிக்கு வருவதுண்டா போன்ற மர்மங்கள் தான் அவை. இந்த மர்மமான விஷயங்களை ஆராய நாசா இப்போது சிறந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் உதவியை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான UFO சார்ந்து பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் விசாரணையில், விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்குப் பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, ஆனால் நாசா அமைப்பினால் வேற்றுகிரகவாசிகள் இல்லை என்ற கூற்றையும் நிராகரிக்க முடியவில்லை. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட UAP (அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள்) குறித்து நாசா தொடர்ந்து ஆய்வு செய்யும் என்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.
மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களே ஆணுறையை பயன்படுத்துங்க! இது லண்டன் எச்சரிக்கை
800க்கும் அதிகமான மர்மமான சம்பவங்கள்
இது குறித்து நாசா அமைப்பின் நிர்வாகி பில் நெல்சன் ஒருமுறை கூறுகையில், "UAP நிகழ்வுகளை ஆராய்வதில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் முன்னணியில் இருப்பதோடு மட்டுமல்லாமல், அதிக வெளிப்படைத்தன்மையுடன் தரவைப் பகிரும்" என தெரிவித்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகளை ஆய்வு செய்ய, நாசா ஒரு வெளிப்புற சுயாதீன ஆய்வுக் குழுவை நிறுவியது. இது 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அவை தொடர்பான தரவு மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து அவற்றின் இயல்புகளில் மீது அதிக வெளிச்சத்தை கொண்டு வந்து, அந்த குழு அதனை கண்டறியும். 36 பக்கங்கள் கொண்ட இந்த நாசா அறிக்கை தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறு. 2021ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி மற்றும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு இடையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை மொத்தம் 247 புதிய UAP அறிக்கைகளைப் பெற்றது. 27 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இருக்கு... ஆனா இல்ல...
நாசா ஆய்வு செய்த நூற்றுக்கணக்கான UAP காட்சிகளுக்குப் பின்னால் ஏதேனும் வேற்று கிரக ஆதாரங்கள் இருப்பதாக 'முடிவு செய்வதற்கு எந்த காரணமும் இல்லை' என்று அறிக்கையின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இருப்பினும், இதை ஒரு சாத்தியம் என்று நாம் ஏற்றுக்கொண்டால், அந்த பொருள்கள் நமது சூரிய குடும்பத்தின் வழியாக இங்கு வந்திருக்க வேண்டும்" என்று நாசாவின் அந்த அறிக்கை கூறுகிறது.
வேற்று கிரக உயிர்கள் இருப்பதாக அறிக்கை முடிவு செய்யவில்லை என்றாலும், நாசாவும் 'பூமியின் வளிமண்டலத்தில் இயங்கும் அறியப்படாத வேற்றுகிரக தொழில்நுட்பத்தின்' சாத்தியத்தையும் நிராகரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | தென் கொரியாவின் இருண்ட கடந்த காலம்! 'குழந்தை ஏற்றுமதியாளர்' நாட்டின் சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ