எல்லையை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதி இல்லை: ஆப்கானை எச்சரித்த ஈரான்
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லையில் இஸ்லாமிக் ஸ்டேட் (IS)பயங்கரவாத குழு இருப்பதை ஈரான் அனுமதிக்காது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை கடுமையாக எச்சரித்தார்.
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லையில் இஸ்லாமிக் ஸ்டேட் (IS)பயங்கரவாத குழு இருப்பதை ஈரான் அனுமதிக்காது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை கடுமையாக எச்சரித்தார்.
ஈரான் அதிபர் தஜிகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளூ போது, "எங்கள் எல்லை பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் IS பயங்கரவாத குழு, இருப்பதையோ, மற்ற நாடுகள் அல்லது பிராந்தியத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதையோ அனுமதிக்க மாட்டோம்" என்று ரைசி கூறினார்.
ஈரான் அதிபர் அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் இருப்பது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல, பிராந்தியத்திற்கே ஆபத்தானது" என்று கூறினார்.
ஆப்கானில் (Afghanistan), அனைத்து ஆப்கானியர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலான ஆட்சி அமைக்கப்பட வேண்டும் எனவும், ரைசி சனிக்கிழமையன்று கூறினார், "ஒரே ஒரு இனத்தை அல்லது அரசியல் குழுவைச் சேர்ந்த ஒரு அரசு அமைவதால், ஆப்கானிஸ்தானின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது." ஏறக்குறைய முழுக்க முழுக்க பஷ்டூன் இனத்தைச் சேர்ந்த, மக்களை கொண்டு ஆப்கானிஸ்தானின் புதி ஆட்சி அமைக்க தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ALSO READ | ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்; சாதி பிரச்சனை தான் காரணமா..!!!
முன்னதாக, அமெரிக்க படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டதும், தாலிபான்கள் ஆப்கானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதும், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்க தேர்தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது இப்பகுதியில் அமைதி திரும்ப உதவும் என்று அவர் நம்பினார்.
ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் அரசாங்கத்தை தேர்தெடுக்க வாக்களிக்க வேண்டும் என்று ரைசி சனிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் பேசினார். " மக்களின் வாக்குகள் மற்றும் மக்களின் விருப்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அங்கு ஏற்பட வேண்டும்" என்று ரைசி கூறினார்.
ALSO READ | காஷ்மீர் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை: தாலிபான்கள் அடித்த ‘அந்தர் பல்டி’
"இஸ்லாமிய குடியரசு எப்போதும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் விரும்புகிறது, மேலும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையாண்மையை ஏற்படுத்தும் ஆப்கானிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR