ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்; சாதி பிரச்சனை தான் காரணமா..!!!

தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 அன்று எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியைப் படித்தது, ஆனாலும், ஒரு மாதம் காலம் ஆன் நிலையில், அவர்களால் முறையாக ஒரு அரசினை அமைக்க முடியவில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2021, 02:49 PM IST
  • எண்ணிக்கையில் சுமார் 10% உள்ள ஹஸாராக்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள்.
  • சுமார் 20%, உள்ள ஸ்பெக்கியர்கள் துருக்கிய மொழி பேசும் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
  • பஷ்தூன் எனப்படும் பஷ்தோ மொழி பேசுபவர்கள் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்; சாதி பிரச்சனை தான் காரணமா..!!!

தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 அன்று எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியைப் படித்தது, ஆனாலும், ஒரு மாதம் காலம் ஆன நிலையில், அவர்களால் முறையாக ஒரு அரசினை அமைக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானின் பிரதமர், சுப்ரீம் லீடர் குறித்த அறிவிப்புகள் வந்தாலும், இன்னும் அதிகாரபூர்வமாக பதவி ஏற்பு நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. 

அதிலும், நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்ட பராதர், அதிகார போட்டி மோதலில் இறந்து விட்டார் என செய்திகள் தொடர்து பரவி வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். அவருடைய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு அவர் உயிருடன் தான் இருக்கிறார் என வதந்திக்கு முற்று புள்ளி வைக்க முயன்று வருகின்றனர். ஆனால், ஆடியோ செய்தி குறித்தும் பல சந்தேக கேள்விகள் எழுப்பப் படுகின்றன. 

முன்னதாக, ஆப்கானியப் படை வீரர்கள் லட்சக்கணக்கில் இருந்த போதும், பல நவீன ஆயுதங்கள் அவர்கள் வசம் இருந்தும் போர் புரியாமல் அப்படியே தாலிபான்களிடம் ஏன் நிலப்பரப்பை ஒப்படைத்தனர், என ஆரம்பத்தில் பல உலக அரசியல் நிபுணர்கள் கேள்விகளை எழுப்பினர். இத்தனைக்கும், அமெரிக்க ராணுவம், ஆப்கான் ராணுவத்திற்கு லட்சக்கணாக்கான டாலர்கள் செலவழித்து பயிற்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் (Afghanistan), பஷ்தோ, பார்சி மற்றும் துருக்கி ஆகிய மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. மேலும், பஷ்தூன், தஜிக், உஸ்பெக் மற்றும் ஹஸாரா ஆகிய நான்கு பிரிவுகள் உள்ளன. இதற்குள் பல சாதிப்பிரிவுகள் உள்ள நிலையில், ஆப்கானிய மக்கள் சாதியப் பிணைப்பு அதிகம் கொண்டவர்கள் எனவும் கூறப்படுகிறது

முதலில் பஷ்தூன் எனப்படும் பஷ்தோ மொழி பேசுபவர்கள் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆப்கானில் சுமார் 40%. உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த பிரிவில், பட்டாணி, சக்கமணி, டௌர், குர்பாஸ், ககர், துர்ரானி, கில்ஜி, அப்ரிதி, அக்கசை, பங்கஷ், லூனி, முக்புல் என பல சாதிகள் உள்ளன

ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!

இரண்டாவது மக்கள் தொகையில், 30% உள்ள தஜிக்கியர்கள். பார்சி மொழி பேசும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களும் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் தான். இந்த பிரிவில், ஜெல்ஹாஸ், பதக்ஷி, தெஹ்கான், பார்மூலி, கிஞ்ஜனி, கோகிஸ்தானி, வாகி என பல சாதிகள் உள்ளன. 

மூன்றாவதாக உள்ள உஸ்பெக்கியர்கள் சுமார் 20%, உள்ளனர். துருக்கிய மொழி பேசும் இவர்கள் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் பொதுவாக வணிகத்தில் ஈடுபடுபவர்கள். இவர்களில் கரகல்பாக், ததார், குய்கூர், உய்கூர், டுங்கன், யூகரி என பல சாதிகள் உள்ளனர். 

அடுத்து ஹஸாராக்கள் எண்ணிக்கையில் சுமார் 10% உள்ள இவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் சாதிய உட்பிரிவுகள் அதிகம் பிஸூத், டை குந்தி, என பல பிரிவுகள் உள்ளன.

ALSO READ | காஷ்மீர் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை: தாலிபான்கள் அடித்த ‘அந்தர் பல்டி’

ஒவ்வொரு சாதிப் பிரிவிலும் ஒரு மதத் தலைவர் இருப்பார். அவர் உத்தரவை தட்டாமல், சம்பந்தப்பட்ட சாதிப்பிரிவு மக்கள் நடந்து கொள்வார்கள். இவர்களில் கலப்பு திருமணங்கள் மிக மிக குறைவு. நமது கிராமங்களில் உள்ள பழக்கம் போல், அத்தை மகன், மாமன் மகள் போன்று நெருங்கிய உறவில் திருமணம் செய்யும் பழக்கமும் உள்ளது. ஆப்கான் மக்களை போலவே ராணுவ வீரர்களும் மதத் தலைவர்களின் மீதான அபிமானம் அதிகம். அவர்கள் உத்தரவை ஒரு போதும் அவர்கள் மீறுவதில்லை

எனவே, இதனை நன்றாக உணர்ந்துள்ள தாலிபான்கள், ஒவ்வொரு சாதிப் பிரிவின் தலைமை மதகுருக்களை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகின்றது. அதனால் அம்மதத் தலைமைகள் உத்தரவுப்படி, ஆப்கானிய ராணுவத்தில் இருந்தவர்கள், எதிர்ப்பு ஏதும் இன்றி தாலிபானுக்கு நிலபரப்பு முழுவதையும் விட்டுக் கொடுத்தார்கள் என கூறப்படுகின்றன. இதில் விதிவிலக்காக பஞ்ஷீர் பகுதியில் மட்டும் தொடர்ந்து போராட்டம் நடந்ததௌ. அப்பகுதியை தாலிபான்கள் கைபற்றி விட்டதாக கூறும் போதிலும், இன்னும் உறுதி படுத்தப்படவில்லை. 

இந்நிலையில், பல்வேறு சாதி பிரிவுகளில், ஒரு சில பிரிவுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், சில சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டினையும் எடுத்துள்ளன. இதற்கு மத்தியில், அதிகார போட்டியும் உள்ளது. தங்கள் சாதி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வகையில், கடும் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதனால் தான் தாலிபான்கள் மிக எளிதாக எதிர்ப்பு ஏதும் இன்றி ஆப்கானிஸ்தானை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து விட்டாலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறுகின்றனர்.

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News