கடந்த வருடம் "ஹஜ்" பயணத்தின்போது மெக்காவில் நடந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கான ஹஜ் பயணிகள் நெரிசலில் சிக்கி பலியானார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்திற்கு முழு காரணம் சவுதி அதிகாரிகள் தான் என ஈரான் குற்றம் சாட்டியது. கூட்ட நெரிசலில் ஈரானியர்களும் பலியானதால் அதை சுட்டிக் காட்டிய ஈரான் இந்த ஆண்டு ஈரான் மக்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்து உள்ளது. சவுதி அரேபிய அதிகாரிகள் "ஹஜ்" பயணித்தின் போது ஈரானிய மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.


ஈரான் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது.