உலகில் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில், ஈராக்கும் ஒன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈராக்கில் (Iraq) உள்ள நசிரியா சிறையில் பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற 21 பேரை ஈராக் திங்களன்று தூக்கிலிட்டதாக அந்நாட்டின் மருத்துவ மற்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தூக்கிலிடப்பட்ட இந்த 21 பேரும் 2005 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் செய்த குறிப்பிட்ட குற்றங்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.


மரண தண்டனை விதிக்கப்படும் நாட்டில் உள்ள ஒரே சிறைச்சாலையான, தி கார் மாகாணத்தில் உள்ள நசிரியா சிறையில் (Nasiriyah prison)  மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


முன்னதாக இந்த சிறை தான், சதாம் உசேன் (Saddam Hussein )ஆட்சியின் போது, முன்னாள் அதிகாரிகளை தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட சிறை ஆகும்.


ALSO READ | Good News: அமெரிக்காவின் மாடர்னா COVID-19 தடுப்பூசி 94.5% தடுப்பாற்றால் கொண்டது..!!


இருப்பினும், 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் (America) அதன் நட்பு நாடுகளும் அவரது அரசாங்கத்தை கவிழ்த்த பின்னர் சதாம் ஹுஸைன் 2006 டிசம்பரில் இந்த சிறையில் தான் தூக்கிலிடப்பட்டார்.


2017 இன் பிற்பகுதியில் பயங்கரவாதக் குழு இஸ்லாமிக் ஸ்டேட் (IS) எதிரான வெற்றியைத் தொடர்ந்து, ஜிஹாதி குழுவிற்கு விசுவாசமாக இருந்ததற்காக ஈராக் தனது சொந்த குடிமக்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.


இருப்பினும், மரண தண்டனையை நாட்டின் அதிபர் தான் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தூக்கிலிடப்பட்டனர்.


திங்களன்று இந்த 21 பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற அதிபர் பர்ஹாம் சலே ஒப்புதல் அளித்ததாக காவல் துறை வட்டாரங்கள் செய்தி நிறுவனமான AFP இடம் தெரிவித்தன.


மரண தண்டனை நிறைவேற்றும் நாடுகளில் ஈராக் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) தெரிவித்துள்ளது.


ALSO READ | யூனிட் 731: இரண்டாம் உலகப்போரின் மிக கொடூரமான சித்திரவதை இல்லம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR