பாக்தாத்: அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்த  முக்ததா அல்-சதர் மதகுருவின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். பதவி விலகிய மதகுருவின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அஹ்டிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அல்-சதரின் அரசியல் வெளியேற்றத்தினால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபரின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 


மேலும் படிக்க | பாடகர் மைக்கேல் ஜாக்சனை கொன்றது யார்?


நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில், உடனடியாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது.


அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த தடுப்புகளை அடித்து உடைத்த அல் சதரின் ஆதரவளர்கள், உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 
மோதலில் ஏற்பட்ட வன்முறையில் 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர்.


இதற்கிடையே, போராட்டக்காரர்கள், வன்முறை மற்றும் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை மதகுரு அல் சதர் விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் படத் தயாரிப்பாளர் கைது


உயர்-பாதுகாப்பு பசுமை மண்டலத்தை விட்டு வெளியேற தனது ஆதரவாளர்களுக்கு "60 நிமிடங்கள்" அவகாசம் கொடுத்த சதர், அதன்பிறகு யாரும் அங்கு இருக்கக்கூடாது என்று எச்சரித்தார். எதிர்ப்பாளர்களை பசுமை மண்டலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்ட அல்-சதர், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.  


மொக்தாதா சதர் வன்முறையை நிறுத்தக் கோரியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள், பாக்தாத்தில் உள்ள பசுமை மண்டலத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.


இதுபற்றி ஐ.நா.வின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், இந்த பதற்ற சூழ்நிலையை தணிக்கவும் மற்றும் வன்முறை பரவி விடாமல் தவிர்ப்பதற்கும் வேண்டிய நடவடிக்கைகளை தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


மேலும் படிக்க | தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் - காருக்கு தீ வைத்த பயங்கரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ