லண்டன் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
லண்டன் சுரங்க ரயில் பாதையில், ரயிலில் இருந்த பக்கெட் குண்டு வெடித்ததில், 22 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர், லண்டனில், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்துக்கு நேற்று ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில், 22 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து லண்டன் போலீசார் பயங்கரவாத சம்பவமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பவத்துக்கு, பிரிட்டன் பிரதமர், தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இக்குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.