வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபௌசி, கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரானுடன் போரிட, அமெரிக்காவில் நான்காவது டோஸ் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்றும், பூஸ்டர் டோஸ் வயது மற்றும் நபரின் உடல்நிலையின் அடிப்படையில் செலுத்தப்படலாம் என்றும் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"மீண்டும் மற்றொரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இந்த விஷயத்தில், எம்ஆர்என்ஏ பெறும் ஒரு நபருக்கு நான்காவது புஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இது வயது மற்றும் தனி நபரின் அடிப்படை நிலைமைகளின் அடிப்படையில் இது போடப்படலாம்" என்று வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 


மூன்றாவது டோஸுக்கு அப்பால் ஒரு ஷாட் தேவை என்பதைக் காட்டும் தரவு குறித்து நிருபர்களுக்குப் பதிலளித்த டாக்டர் அந்தோனி ஃபாசி, இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.



முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர், நவம்பரில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் அரை மில்லியன் மக்கள் கோவிட் -19 ஆல் இறந்துள்ளனர் என்று கூறினார். இது கொரோனா வைரஸ் நெருக்கடியின் "முழுமையான தொற்றுநோய் கட்டம்" என்று அவர் கூறினார். செவ்வாயன்று, உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் ஒரு கவலையளிக்கும் மாறுபாடு என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து சுமார் 100,000 இறப்புகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறியது.


டாக்டர் ஃபாசி மேலும் கூறுகையில், "மருந்து நிறுவனமான ஃபைசர், ஆறு மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான குழந்தைகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் தரவுகள் வந்துள்ளன" என்று கூறினார்.


மேலும்  படிக்க | ஓமிக்ரான் BA.2 துணைவகை உலகம் முழுதும் பரவும்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு 


இதற்கிடையில், அமெரிக்காவில் சில மாநிலம் தழுவிய கோவிட்-19 முகக்கவச கட்டாய விதிமுறைகள் முடிவுக்கு வருகின்றன. முன்னதாக, திங்கள்கிழமை (உள்ளூர் நேரம்) பள்ளிகளில் முகக்கவச பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றை வெள்ளை மாளிகை மீண்டும் வலியுறுத்தியது. சில மாநிலங்கள் வகுப்பறைகளில் கட்டாய முகக்கவச விதிமுறையை நீக்குவது குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.


தடுப்பூசி போடப்பட்டவர்கள், தொற்று கணிசமான அல்லது அதிகம் பரவும் பகுதியில் இருந்தால், பொது வெளியில் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று CDC பரிந்துரைக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் படி, தொடர்ந்து ஐந்தாவது வாரமாக உலகளவில் கொரோனா வைரஸ் இறப்புகள் 68,000 ஆக உயர்ந்துள்ளன. முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் 7 சதவீதம் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. 


கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு செய்தியாளர் மாநாட்டில், உலகின் பல பகுதிகளில் கோவிட் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறினார். கொரோனா வைரஸுக்கு எதிராக எந்தவொரு நாடும் சரணடைவதோ அல்லது வெற்றியை அறிவிப்பதோ இப்போது சாத்தியம் இல்லை என்று அவர் எச்சரித்தார். "தடுப்பூசிகள் காரணமாகவும், ஓமிக்ரானின் அதிக பரவல் மற்றும் குறைந்த தீவிரத்தன்மை காரணமாகவும், வைரஸ் பரவுவதைத் தடுப்பது சாத்தியமில்லை, அது அவசியமில்லை என சில நாடுகளில் ஒரு எண்ணம் உள்ளது. ஆனால் உண்மைக்கு மேல் எந்த எண்ணமும் கிடையாது" என்று அவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க | சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் தீவிர ஆலோசனை! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR