ஆபரணங்களில் பதிக்கப்படும் கற்களில் முதன்மையானது வைரம் என்றால், வைரங்களின் பெயர்களில் மிகவும் பிரபலமானது கோஹினூர் வைரம். இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குக் கொண்டு செல்லபப்ட்ட இந்த வைரம், உலகின் பல விதமான வைரங்களிலும் மிகவும் மதிப்புமிக்கது ஆகும். ஆங்கிலேயப் படையெடுப்பின் போது, இந்தியாவிலிருந்து திருடப்பட்டு இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்ட பின்புலத்தைக் கொண்ட கோஹினூர் வைரம் உலகப் புகழ் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல விதமான முயற்சிகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன்னர், ராணி எலிசபெத் காலமானார். அதன் பிறகு ராணியின் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடினார். ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அதன் பிறகு உத்வேகம் பெற்றன. 2800 வைரங்களை கொண்ட இங்கிலாந்து ராஜ கிரீடத்தில் உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் மகுடமாக அமைந்துள்ளது.


பல தசாப்தங்களாக இந்தியாவும் இந்தியர்களும், தங்கள் தாய் மண்ணிற்கு கொண்டு வர விரும்பிய கோஹினூர் வைரத்தை, ராஜ கிரீடத்தில் இருந்து அகற்றும் முடிவை தற்போது மன்னர் சார்லஸ் எடுத்துவிட்டார். கோஹினூர் வைரம் இல்லாமல் ராணி மேரியின் கிரீடம் மீட்டமைக்கப்படும் என்று அரச குடும்பம் அறிவித்துள்ளது இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் தங்கள் நாட்டு பாரம்பரிய சொத்தை மீட்கும் கனவுகளுக்கு வித்திட்ட இந்த அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | UPI- PayNow: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்!


பிரிட்டனின் அரசராக இளவரசர் சார்லஸ் முடி சூட்டிக் கொள்ளும்போது, அவரின் ராணி கமீலா எலிசபெத் மகாராணியின் கோஹினூர் வைரத்துடன் கூடிய கிரீடத்தை அணியமாட்டார். மறைந்த ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சேகரிப்பில் வைரங்களைச் சேர்க்க, ராணியின் கிரீடத்தை மாற்றியமைக்கப் போவதாக அரசு தெரிவித்துள்ளது.


இந்தத் தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்த பிறகு, இந்தியாவில் இருந்து திருடிச் சென்ற வைரத்தை, திருப்பிக் கொடுங்கள் என்ற கோரிக்கை இந்தியர்களால் அதிக அளவில் பதிவிடப்படுகிறது. அதன் எதிரொலியாக கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திருப்பித் தரலாமா வேண்டாமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.


 இந்திய பாரம்பரிய சொத்தான கோஹினூர் வைரத்தை மீட்கும் கனவுகளுக்கு வித்திட்ட இங்கிலாந்து அரச குடும்பத்தின் அறிவிப்பு.  சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு த்ரோபேக் புகைப்படத்துடன் UK அரச குடும்பத்தின் கிரீடம் பற்றிய விரிவான இடுகை இது.



“கோஹினூர் வைரத்தின் பிரதியை வைத்திருந்த ராணி மேரியின் கிரீடம், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக கோஹினூர் வைரம் இல்லாமல் மறு உறுவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரச குடும்பம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. புதிய மகுடம் இந்தியாவை வருத்தப்படுத்த விரும்பவில்லை என்று சிலர் இதைப் பற்றி சொல்கின்றானர். மகுடம், தனது காலனித்துவ பாரம்பரியத்தை மெதுவாகக் கைவிட விரும்புகிறது என்பதற்கான சமிக்ஞையாக இது இருந்தது. இரத்தம் மற்றும் கொள்ளையடிப்பதில் மூழ்கியிருந்த மரபு மற்றும் ராஜாக்கள் மற்றும் ராணிகள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் அனைத்து பொக்கிஷங்களும் பெயரிடப்பட்ட ஒரு புதிய உலக ஒழுங்கிற்கு நகரும். ஆனால் இந்த கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கப்படுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


இந்த பதிவு, பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் வைரலானதுடன், சமூக ஊடகங்களில் சூடான விவாதத்திற்கு வழிவகுத்தது. இந்தியர்கள் இப்போது கோஹினூர் வைரத்தை திரும்பக் கோருகிறார்கள்.


மேலும் படிக்க | கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் : குடியரசுத் தலைவரிடம் முறையீடு


ஆனால், மிகவும் வித்தியாசமான கமெண்ட் இது தான்.“இவைகளில் எதுவுமே உண்மையான காரணம் என்று நான் நினைக்கவில்லை. கோஹினூருக்கு ஆண்கள் அணிந்தால் சாபம் ஏற்படும் என்று வரலாறு கூறுகிறது. அதனால்தான் அவர்கள் அதை கிரீடத்திலிருந்து அகற்றுகிறார்கள் என்று நான் கருதுகிறேன்”


“கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதே நல்லது’ என்று ஒருவர் பதில் எழுதியுள்ளார். "இதோ ஒரு யோசனை - கோஹினூரை இந்தியாவுக்குத் திருப்பி விடுங்கள்."


1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்த கோஹினூர் வைரம், பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.


 "தயவுசெய்து அந்த வைரத்தை இந்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்புங்கள், அவர்கள் அதை அந்த பத்து வயது ஆட்சியாளரிடமிருந்து திருடினார்கள்., அது ஒரு குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய வைரம்." என பலரும் பலவிதமான கருத்துக்களை எழுதி, கோஹினூர் வைரத்தை வைரல் செய்தியாக்கிவிட்டனர்.


மேலும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ