Dave Bautista Weight Loss: இப்போது இளைஞர்களாக இருப்பவர்களிடம் உங்களுக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த டிவி சேனலும், அதில் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்னவென்று கேட்டால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த ஒரு பதிலைதான் பெரும்பாலானோர்கள் கூறுவார்கள். அந்தளவிற்கு Ten Sports சேனலும், அதில் ஒளிபரப்பான WWE நிகழ்ச்சியும் அவர்களின் நினைவில் ஆழமாக தங்கிவிட்டது எனலாம். இன்றும் கூட WWE போட்டிகளை தொடர்ந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூட அவரது யூ-ட்யூப் சேனல்களில் பலமுறை WWE போட்டிகள் குறித்து பேசுவார். டி20 உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, WWE சூப்பர்ஸ்டார் ஆன ரிக் பிளையரின் பாணியில் நடந்துசென்று டிராபியை ஜெய் ஷாவின் கைகளில் வாங்கினார். இந்த ஐடியாவை கொடுத்தது குல்தீப் யாதவ் என சொன்னாலும், WWE போட்டியின் தாக்கம் என்பது பெரியளவில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது என்பதை கூறவே மேற்சொன்ன உதாரணங்களை குறிப்பிட்டேன்.


உடல் மெலிந்த பாடிஸ்டா


அப்படியிருக்க, WWE சூப்பர்ஸ்டார்களில் பலராலும் இன்றளவும் போற்றப்படும் டேவ் பாடிஸ்டாவின் (Dave Bautista) புகைப்படம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. WWE போட்டிகளில் மட்டுமின்றி மார்வலின் படங்கள் உள்பட பல்வேறு திரைப்படங்களில் பாடிஸ்டா நடித்துள்ளார். அந்த வகையில், கனடாவின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) The Last Showgirl என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் திரையிடலுக்கு பாடிஸ்டா வந்திருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க | ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்களின்றி பூமி வந்தது


சமூகவலைதளங்களில் பரபர பேச்சு


கட்டுமஸ்தான உடற்கட்டுகள், ஜிம் பாடியாக இருந்த டேவ் பாடிஸ்டா அந்த புகைப்படத்தில் உடல் மெலிந்து காணப்பட்டார். அவரின் கவர்ச்சிகரமான உடற்தோற்றம் மறைந்து, வேறு ஸ்டைலில் பாடிஸ்டா தோற்றமளித்தார். பாடிஸ்டாவை சிறுவயதில் ரசித்து மகிழ்ந்த பலருக்கும், இது பாடிஸ்டாதான் என்பது புரியவே சில நொடிகள் எடுத்தது என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் திடீர் உடல் எடைகுறைப்புக்கு என்ன காரணம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 



பாடிஸ்டாவுக்கு 55 வயது ஆகிவிட்டது என்றும் மல்யுத்த வீரராகவும், நடிகராகவும் இருந்த அவர் அதில் இருந்து வெளியே வரவும் உடல் எடை குறைவது இயல்பு தானே என பலரும் கூறினர். ஆனால், அதிலும் 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும், இப்போது வைரலாகும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு இரண்டாண்டுகளுக்குள் இத்தகைய மாற்றம் வர நிச்சயம் வேறு காரணம் இருக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


பாடிஸ்டா சொன்னது என்ன?


தனது உடல் எடை குறைப்பு குறித்து டேவ் பாடிஸ்டா ஒரு நேர்காணலில் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் அவர்,"நான் நன்றாக உடல் எடையை குறைத்து வருகிறேன். எனது 19 வயதுக்கு பின் இப்போதுதான் இவ்வளவு குறைவான எடைக்கு வந்துள்ளேன். நான் Deacon தொடரை தொடங்கியபோது, ​​நான் சுமார் 325 பவுண்டுகள் (147 கிலோ) இருந்தேன். 


WWE போட்டிகளில் பங்கேற்றபோது, நான் சுமார் 290 பவுண்டுகள் (131 கிலோ) இருந்தேன். இப்போது, ​​நான் சுமார் 240 பவுண்டுகள் (108 கிலோ) இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, Knock Out The Cabin படத்திற்காக நான் 315 பவுண்டுகள் (142 கிலோ) எடையுடன் இருந்தேன், அப்போதுதான் உடல் எடையை குறைக்கும் சவாலை ஏற்றுக்கொண்டேன். இப்போது, ​​நான் என் உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 


மேலும் படிக்க | பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய எரிகல்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ