ஸ்பெயினில் பயங்கரவாதிகள் தாக்குதல், ஸ்பெயினில் தாக்குதல், Spain Attack, பார்சிலோனா தாக்குதல், பார்சிலோனா, தீவிரவாதி தாக்குதல், Barcelona Terror Attack, Spain Terror Attack, Barcelona Attack, ISI, Terror attack, ஐஎஸ்ஐ, பார்சிலோனா, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் சுமார் 106 கி.மீட்டரில் வந்த கார் மோதியதில்(இரண்டு முறை) குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.


முதல் சம்பவம் நேற்று, மிக பிரபலமான தெருவில் பார்சிலோனாவின் கூட்டம் நிறைந்த பிரபலமான தெருவில் தீவிரவாதி நடத்திய தாக்குதலி 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


முதல் சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்குப் பின், மற்றொரு கார் கேம்பிரில்களின் ஸ்பானிஷ் கடலோர ரிசார்ட்டில் இன்று போது மக்கள் மீது மோதியது. இந்த இரண்டாவது தாக்குதலில் பொதுமக்கள் 6 பெரும், ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தனர். ஆனால் காரை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. தற்போது பார்சிலோனா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பார்சிலோனா தாக்குதலில் 18 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் பாதிக்கப்பட்ட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ பொறுப்பேற்றுள்ளது. மேலும் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. 


இந்நிலையில், பார்சிலோனாவின் அருகே உள்ள காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 தீவிரவாதி காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 


பார்சிலோனா தாக்குதலுக்கு பல சர்வதேச தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.