இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தின்படி, நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால், 1,00,000 யூரோ வரையிலான தொகை அபராதமக விதிக்கப்படும் என்று இத்தாலி அரசு கூறுகிறது. .
  
ChatGPTக்குப் பிறகு, முறையான தொடர்புக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய இத்தாலி முயல்கிறது.  இத்தாலியில் உள்ள குடிமக்கள் முறையான தகவல்தொடர்புக்காக ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவது விரைவில் தடை செய்யப்படும் என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசின் ஆணையை மீறி, ஆங்கிலம் உட்பட பிற அந்நிய மொழிகளை பேசினால், மிகப்பெரிய அளவிலான அபராதங்கள் விதிக்கப்படும். இத்தாலி நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின, பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி (Brothers of Italy party) புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!


இதன்படி, உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால், யூரோ 1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும்ம்.


"இத்தாலியர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்தின் போது ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்தினால், அவர்கள் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் யூரோ 1,00,000 (USD 1,08,705) வரை அபராதம் செலுத்த வேண்டும்." சிஎன்என் தெரிவித்துள்ளது.


இத்தாலிய பிரதிநிதிகள் சபையில், ஃபேபியோ ராம்பெல்லி இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் ஆதரவு கிடைத்துள்ளது.


எந்தவொரு வெளிநாட்டு மொழியைப் பற்றியும் பேசினாலும், குறிப்பாக "ஆங்கிலோமேனியா" அல்லது ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு, இத்தாலிய மொழியை "இழிவுபடுத்துகிறது மற்றும் மலினப்படுத்துகிறது" என்று இந்த சட்ட முன்மொழிவு கூறுகிறது. உண்மையில் இங்கிலாந்து தற்போது ஐரோப்பிய யூனியனின் ஒரு பகுதியாக இங்கிலாந்து இல்லை என்ற நிலையில், இத்தாலி அரசின் இந்த முடிவு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுகிறது. 


மேலும் படிக்க | சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!


இந்த சட்ட மசோதா பாராளுமன்ற விவாதத்திற்கு செல்ல வேண்டும், நாட்டில் செயல்படும் நிறுவனங்களில் "பெயர்கள்" உட்பட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையும் இது தடை செய்கிறது.


இந்த சட்ட வரைவின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்துமேல் தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில், இத்தாலிய மொழி பதிப்புகளைக் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


"ஆங்கில மோகம் என்பது நாகரீகத்திற்கான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலோமேனியா ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பின்விளைவுகளைக் கொண்டுள்ளது" என்று வரைவு மசோதா கூறுகிறது.


இத்தாலி நாட்டில், "தேசிய பிரதேசத்தில் பொது பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் இத்தாலி மொழியை பயன்படுத்தவேண்டும்". அவ்வாறு செய்யாவிட்டால், அதற்கு யூரோ 5,000 (USD 5,435) மற்றும் யூரோ 100,000 (USD 108,705) வரை அபராதம் விதிக்கப்படும்.


மேலும் படிக்க | ஆர்ட்டெமிஸ் II நிலவு திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் பெயர்கள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ