ஜப்பான் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சிக்கி-3 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்!
மேற்கு ஜப்பானின் ஒசாகோ, கியாடோவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை சரியாக 6:12 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.9- ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால், 9 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒசகா விமான நிலையத்தில் 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து, தண்டவாளங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா எனபது பற்றி ஆய்வு நடைபெறுவதால், புறநகர் ரயில்சேவை மற்றும் புல்லெட் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.