இனிமேல் தடுப்பூசி வேண்டாம்! நம்முடைய ஸ்டைலில் பார்க்கலாம் !வடகொரியா அதிபர் அதிரடி!
அண்டார்டிகா கண்டம் வரை பரவிய கொரோனா இதுவரை எங்கள் நாட்டில் பரவவில்லை என்று வடகொரியா அதிபர் கிம் நீண்டகாலமாக கூறி வருகிறார். தற்போது தடுப்பூசியும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
வடகொரியா:- அண்டார்டிகா கண்டம் வரை பரவிய கொரோனா இதுவரை எங்கள் நாட்டில் பரவவில்லை என்று வடகொரியா அதிபர் கிம் நீண்டகாலமாக கூறி வருகிறார். தற்போது தடுப்பூசியும் வேண்டாம் என்று கூறியுள்ளார். உலகின் பல நாடுகளிலும் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இப்படி பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு அனுப்பக்கூடிய தடுப்பூசிகளை வேண்டாம் என்று தன்னுடைய நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
மேலும் அவர், ' இத்தகைய கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலை சமாளிக்க போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கிய நாளிலிருந்தே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. கொரோனா பரவலால் வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார் கிம். தங்கள் நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதை வல்லுநர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR