மர்ம தேசமான வட கொரியாவில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு புதிர் இருக்கிறது. பல கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கான விடைகள் கிடைப்பதற்கு முன்னர் மற்றொரு மர்மம் முளைத்து விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காணாமல் போவது வட கொரிய (North Korea) ஆட்சியாளர்களின் பொழுதுபோக்கா என்ற கேள்வி எழும் அளவிற்கு, அங்கு அவ்வப்போது யாராவது காணாமல் போவிடுகிறார்கள். ஊகங்கள் வலுப்பெற்று எல்லை மீறும்போது திரும்பி வந்து விடுகிறார்கள்.


இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொது மக்களின் பார்வையில் படாமல் காணாமல் போயிருந்த கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) சகோதரி இப்போது மீண்டும் காணப்பட்டார். அல்லது, அவரை மீண்டும் பொது மக்களின் பார்வைக்குக் காட்டவே அவர் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டார் என்றும் கூறலாம்.


வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் வெள்ளிக்கிழமை வட கொரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமத்தில் மீட்பு குடியிருப்புகளை பார்வையிட்டார். அவருடன் அவரது சகோதரியும் காணப்பட்டார். சுமார் இரண்டு மாதங்களாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து இருந்த கிம்மின் சகோதரி இப்போதுதான் காணப்படுகிறார்.


கிம், தனது சகோதரி மற்றும் சில அதிகாரிகளுடன், கிம்வா கவுண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு விஜயம் செய்தார். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த கிராமத்தில் பலர் இறந்தனர். பல சொத்துக்கள் சேதமடைந்தன.


"இந்த ஆண்டு முன்னெப்போதும் கண்டிறாத பல சோதனைகளை நாம் கண்டுள்ளோம்.” என்று கிம் கூறியதாக உள்ளூர் ஊடக சேனலான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளை பாராட்டிய கிம், இப்பகுதியில் கட்டப்படும் புதிய வீடுகள் பழைய பாணியில் ஒரே வகையில் இருப்பதைப் பார்த்து தான் வருத்தப்படுவதாக கூறினார்.


ALSO READ: வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?


இந்த ஆண்டு, கோடை புயல்கள் வட கொரியாவை மோசமாக பாதித்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன. இது நாட்டின் நாள்பட்ட உணவு பற்றாக்குறையை மோசமாக்கியுள்ளது.


அவரது சகோதரி கிம் யோ-ஜாங் (Kim Yo-Jong) கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களின் பார்வையில் படாமல் மறைந்து இருந்தார். அவர் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளதாக வதந்தி பரவத் தொடங்கிய சில நாட்களில் அவர் பொது மக்கள் பார்வையிலிருந்து காணாமல் போனார்.


அவரது சகோதரரான கிம்முக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அவருக்குப் பிறகு அவரது சகோதரி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றும் பல வதந்திகள் பரவி வந்தன.


ஆட்சிப் பொறுப்பில் இரண்டாவது மிக முக்கியத்துவம் வாய்ந்த நபராகக் கருதப்பட்ட கிம்மின் சகோதரி கிம் யோ-ஜாங், தென் கொரியாவுக்கு எதிரான கடுமையான கருத்துக்களுக்காக அறியப்படுகிறார். இருப்பினும், அவர் காணாமல் போன பிறகும் பல வதந்திகள் பரவத் தொடங்கின. அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இரு உடன்பிறப்புகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்ததாக ஊகங்கள் கிளம்பின.


வெள்ளிக்கிழமை, ஆளும் கட்சி செய்தித்தாள் ரோடாங் சின்முன் கிம்மின் சுற்றுப்பயணத்தை காட்டியது. சிவப்பு கூரைகள் மற்றும் பழுப்பு மற்றும் வெள்ளை சுவர்கள் கொண்ட வீடுகளின் வரிசைகளைக் காட்டியது.


புதிதாக கட்டப்பட்ட வீடுகளைப் பற்றி பேசிய கிம், கட்டுமானப் பணிகளின் வேகம் நன்றாக இருந்தாலும், ​​"சுற்றியுள்ள சூழலுடனும், பன்முகத்தன்மையுடனும் கலை சிந்தனைகளின் நல்லிணக்கம் இன்னும் சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்கலாம்” என்று தான் எண்ணுவதாகக் கூறியதாக கே.சி.என்.ஏ தெரிவித்தது. 


ALSO READ: வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR