8 மதத்திற்கு பிறகு பொது நிகழ்ச்சியில் வடகொரிய ஜனாதிபதி மனைவி
வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் மனைவி எட்டு மாதங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிளும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இதனால் கிம் அவரை ஒதுக்கியிருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. மேலும், அவரது மனைவியை கிம் கொலை செய்து இருக்கலாம் எனவும் வதந்திகள் கிளம்பின. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி கிம் தமது மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் 9 மாதங்கள் தொடர்ந்து ரி சோலை கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் வடகொரியா கடந்த வாரம் சோதனை மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றி அடைந்ததன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிம்மின் மனைவி ரி சோல் ஜூ கலந்து கொண்டுள்ளார்.
ரி சோல் ஜூ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்தே வருவார் என கூறப்படுகிறது.
தற்போது எட்டு மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் ரி சோல் கலந்து கொண்டுள்ளார்.