World’s Oldest Bank: மனித வரலாற்றில் மிகப் பழமையான வங்கி!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மொராக்கோவில் (Morocco) அமாசி சமூகத்தினர் பயன்படுத்திய வங்கி முறை ரபாத்-இகுடர் (Rabat-Igudar) என்று அழைக்கப்பட்டது. இதை உலகின் பழமையான வங்கி என்று கூறலாம்.
World’s Oldest Bank : இந்த நவீன யுகத்தில், நாம் பணம், நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, மக்களிடன் இந்த பழக்கம் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா. அந்த பழமையான வங்கி முறை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அமைப்புகள் இருந்தன, அவற்றில் என்ன சேமிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மொராக்கோவில் (Morocco) அமாசி சமூகத்தினர் பயன்படுத்திய வங்கி முறை ரபாத்-இகுடர் (Rabat-Igudar) என்று அழைக்கப்பட்டது. இதை உலகின் பழமையான வங்கி என்று கூறலாம் என மொராக்கோ வேர்ல்ட் நியூஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
உலகின் பழமையான வங்கி
ராய்ட்டர்ஸ், இந்த பழமையான வங்கி குறித்த ஒரு குறுகிய வீடியோ அறிக்கையை வெளியிட்டது. 'அகாதிர்' என்றும் அழைக்கப்படும் இந்த பழமையான வங்கி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Yahoo! News மற்றும் பிற வெளிநாட்டு ஊடகங்களும் இது குறித்த தகவல்களை அளித்துள்ளன. பல ஆராய்ச்சியாளர்கள் இந்த அமாஸி (Amazigh)களஞ்சியங்களை மனித வரலாற்றில் மிகப் பழமையான வங்கி முறைகளில் ஒன்றாக கருதுகின்றனர். பார்லி அல்லது கோதுமை போன்ற உணவு தானியங்களுடன் கூடவே, சட்ட ஆவணங்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை சேமிக்க அவை பயன்படுத்தப்பட்டன.
ALSO READ | UFO, வேற்று கிரக வாசிகள் குறித்து அமெரிக்கா கூறுவது என்ன
இது குறித்து ஆராய்ச்சி நடத்திய பேராசிரியர் காலித் அலரூட் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், இது வங்கிகளின் அமைப்பு தொடங்கியது என்பதற்கான முதல் அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்கிறார். ஏனெனில் நாங்கள் வங்கிகள் என்று கூறும்போது, சொத்துக்களைப் பாதுகாக்குன் ஒரு பாதுகாப்பான இடம் என்று பொருள். இந்த அமைப்பு நம் வம்க்கி அமைப்புகளை போலவே பழமையானது என்று அவர் மேலும் கூறினார். அவை எப்போது நிறுவப்பட்டன என்பதை தீர்மானிப்பது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்
ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
இந்த பழைய கால வங்கிகளை 'லமைன்' (Lamine) என்ற செயலாளரால் நிர்வகிக்கப்பட்டதாக, அரபு செய்தித்தாள் எமரத் அல் யூமுக்கு ( (Emarat Al Youm) )செய்தி வெளியிட்டுள்ளது என ஆராய்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் ஆஃப்கிர் தெரிவித்தார். மேலும் இந்த வங்கியை, சுமார் 10 பேர் கொண்ட குழுவும் கண்காணித்தது, இந்த குழு இன்ஃப்ளாஸ் (Inflas)என்று அழைக்கப்பட்டது. இந்த குழு வெவ்வேறு பழங்குடியினரின் பிரதிநிதிகளால் ஆனதாக கூறப்படுகிறது.
ALSO READ | Real-life tarzan: 41 ஆண்டுகளை காட்டில் கழித்த அசல் டார்ஜான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR