மர்மமான மெக்ஸிகோ கிராம்; மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எவருக்கும் பார்வை இல்லை
மெக்ஸிகோவில் (Mexico) அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் (Tiltepec Village) குருடர்களின் கிராமம் என கருதப்படுகிறது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் இங்கு வாழும் அனைவரும் பார்வையற்றவர்கள்.
உலகின் பல மர்மமான விஷயங்களைப் பற்றி நாம் அவ்வவ்போது கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த தகவல்களில் சில உங்களை நிச்சயம் வியப்பையும் பீதியையும் ஏற்படுத்தலாம். மெக்ஸிகோவில் உள்ள ஒரு மர்மான விசித்திரமான கிராமத்தில் (Mysterious Village)எல்லோரும் பார்வையற்றவர்கள் (Village Of Blind People).
உலகில் உள்ள ஒரே குருட்டு கிராமம்
மெக்ஸிகோவில் அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் பார்வையற்றோரின் கிராமம் (Village Of Blind People) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் பார்வை இல்லை. இது உலகின் மிக மர்மமான கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உங்களால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் அது முற்றிலும் உண்மை. இதன் பின்னால் ஒரு பெரிய மர்மம் உள்ளது.
ALSO READ | சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை: நடந்தது என்ன
பிறந்த சில நாட்களில் பறி போகும் பார்வை
ஜாபோடெக் நாகரீகத்தை சேர்ந்த (Zapotec Civilization) பழங்குடியின மக்கள் கிராமத்தில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்ஸிகோவில் உள்ள டில்டெபெக் கிராமத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது, கண் பார்வை பாதிப்பு ஏதும் இன்றி, நன்றாகத் தான் பிறக்கிறது. ஆனால் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு, அதன் கண்பார்வை போய்விடும். அங்கு வாழும் மற்றவர்களைப் போல அக்குழந்தைக்கும் பார்வை பறிபோய் விடுகிறது.
இங்குள்ள மர்மமான மரம் தான் காரணமா
கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு மரத்தை தங்கள் குருட்டுத்தன்மைக்கு காரணம் என்று கருதுகின்றனர். லாவ்ஸுவேலா என்ற அந்த மர்மமான சபிக்கப்பட்ட மரத்தைப் பார்த்த பிறகு, மனிதர்கள் முதல் விலங்குகள் மற்றும் பறவைகள் வரை அனைவரும் இங்கு குருடர்களாகி விடுகிறார்கள் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும், விஞ்ஞானிகள் இந்த வாதத்தை ஏற்கவில்லை. மக்களின் குருட்டுத்தன்மைக்கு பின்னால் எந்த மரமும் காரணமும் இல்லை என்று அவர் கூறுகிறார்கள். ஆனால் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையுள்ள பறக்குபூச்சி ஒன்றினால் இவர்கள் பார்வை பறிபோவதற்கு (Poisonous Flying Insect) காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
வாழ்க்கையின் எதிரியாகி போன விஷப்பூசி
ஒரு சிறப்பு வகையான விஷ ஈ (Poisonous Flying Insect)கடித்ததால் மக்களின் கண்பார்வை பறிபோகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கிராம மக்கள் அனைவரும் குடிசைகளில் வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 70 குடிசைகள் உள்ளன. அவர்களில் சுமார் 300 பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள். இந்த குடிசைகளுக்கு ஜன்னல்களும் இல்லை. சிலரின் கண்பார்வை திரும்ப கூடும் எனவும் சிலர் நம்புகின்றனர்.
ALSO READ | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை; அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR