சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை: நடந்தது என்ன

சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில், 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று மனிதநேயம் கொல்லப்பட்டது. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 4, 2021, 07:55 PM IST
  • சீனாவின் சீர்திருத்தவாதியான ஹு யோபாங்கின் மறைவில், சதி உள்ளதாக, ஜனநாயக ஆதரவு மக்கள் சந்தேகித்தனர்.
  • சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மாணவர்கள், பொது மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
  • ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், போராட்டம் உச்சம் அடைந்தது.
சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை: நடந்தது என்ன

சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில், 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று மனிதநேயம் கொல்லப்பட்டது. 
1989 ஆம் ஆண்டில் (1989 Tiananmen Square massacre), ஜனநாயக கோரிக்கையுடன் சீனாவில் ஒரு மகத்தான இயக்கம் நடந்தது.

சீன மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1989 ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய போராட்டம் வலுப்பெற்று, அதே ஆண்டு ஜூன் 4, அன்று, சீனாவின் (China) தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில், மாணவர்கள் பெருமளவில் கூடினர். ஆனால் சீன அரசு இந்த போராட்டத்தை ராணுவ டாங்குகளாலும், துப்பாக்கிகளாலும் நசுக்கியது. பெய்ஜிங்கின் வீதிகளில் அப்பாவி மாணவர்களின் இரத்தம் வீதியில் ஆறாக ஓடியது.

1989 ஜூன் 4, அன்று அப்போதைய சீன கம்யூனிச அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையில் எத்தனை பேர் இறந்தார்கள்  என்பது இது வரை தெரியவில்லை. சீனாவின் சர்வாதிகார அரசு, இந்த அடக்குமுறையில் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் கூறியது. ஆனால், சீனாவில் இருந்த ஒரு இங்கிலாந்து பத்திரிகையாளர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறினார். ஜனநாயகத்தை நசுக்கும் இத்தனை பயங்கரமான நடவடிக்கை வரலாற்றில், இதுவரை எந்தவொரு நாட்டிலும் நடக்கவில்லை.

ALSO READ | Israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நாற்காலியை அசைத்து பார்க்கும் பென்னட்..!!

 

சீனாவின் சீர்திருத்தவாதியான ஹு யோபாங்கின் மறைவில், சதி உள்ளதாக, ஜனநாயக ஆதரவு மக்கள் சந்தேகித்தனர். ஆகவே, அப்போதைய சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், இந்த போராட்டம் உச்சம் அடைந்த போது, கம்யூனிச சக்தி சீனாவிலிருந்து ஒழிந்து விடும் என்று உலகம் நினைத்தது. ஆனால் சீனாவின் மனிதாபிமானம் அற்ற கம்யூனிச அரசு, இராணுவத்தை பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று குவித்து, போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியது.

படுகொலை நடந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எந்தவொரு கம்யூனிஸ்ட் தலைவரும் இன்று வரை இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. எந்த கம்யூனிஸ்ட் தலைவரோ அல்லது அரசோ அதன் விமர்சனத்தை பற்றி கூட கவலைப்படவில்லை. அதோடு மட்டுமல்ல, அந்த படுகொலையை நியாயப்படுத்தும் வகையில், தான் பேசி வருகின்றனர்.

“எந்தவொரு நாட்டிலும், அரசியல் ஸ்திரமின்மையை சவால் விடும் வகையில் நெருக்கடி வரும். தியனன்மென் சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. அரசின் இந்த சரியான நடவடிக்கை காரணமாக, சீனாவில் ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் ஏற்பட்டது” என பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

ALSO READ | 'நான் தான் அப்பவே சொன்னேனே’; 10 டிரில்லியன் டாலர் கொடுக்கணும்: Donald Trump 

More Stories

Trending News