பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுத்தன. இந்த நெருக்கடிக்கு மத்தியில், உதவி பெறவும், அந்த நாடுகளின் மனதை மாற்றவும் பாகிஸ்தான் புதுப்புது வழிகளை கையாண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு கடன் தொல்லையில் இருந்து தன்னை எப்படி மீட்பது எனப் புரியாமல் தவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு பரிசுகள் வழங்குவதன் மூலம், அவரது மனம் மாறி நிதி உதவி ஏதேனும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 100 ஆடுகளை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். சட்டத்தை மாற்றி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


கடன் உதவியை பெற பாகிஸ்தான் எந்த அளவிற்கும் செல்ல தயாராக உள்ளது என்பதை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் எடுத்த முடிவிலிருந்து அறியலாம். துபாய்க்கு 100 ஆடுகளை ஏற்றுமதி செய்ய சிறப்பு அனுமதி வழங்க பாகிஸ்தான் அரசு செவ்வாய்க்கிழமை முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்... கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்


இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக 2020 ஆம் ஆண்டில், உயிருள்ள விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள எமிரேட்ஸ் தூதரகத்தின் சிறப்பு கோரிக்கையின் பேரில் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) ஆடுகளை ஏற்றுமதி செய்ததற்கான அனுமதி வேண்டி அமைச்சரவைக்கு கோரிக்கையை அனுப்பியது. 2020 ஆண்டிற்கான ஏற்றுமதி கொள்கை ஆணையின் கீழ், உயிருள்ள விலங்குகளை ஏற்றுமதி செய்வது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஜெனரல் ஷேக் முகமது பின் சயீத், ஆடு ஏற்றுமதிக்கு சிறப்பு அனுமதி கோரியிருந்தார். கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்குப் பதிலாக ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் அண்மையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் 2004 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்தார், ஆனால் நீண்டகால நோயினால் கடந்த மாதம் தனது 73வது வயதில் காலமானார்.


இதற்கிடையில், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அரபு ட்விட்டர் கணக்கு இடைநீக்கத்திற்குப் பிறகு புதன்கிழமை மீட்டெடுக்கப்பட்டது. முன்னதாக செவ்வாயன்று, அரேபியர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த ஷாபாஸ் ஷெரீப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அரசாங்கம் தொடங்கியது. இவை தவிர, நாடு முழுவதும் பொதுத் துறைக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அமைச்சர் மரியம் அவுரங்கசீப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.


மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR