வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்று முன்தினம் இடைவிடாது பெய்த மழையால்  டாக்கா, சிட்டகாங், பந்தர்பன், ரங்கமாட்டி போன்ற நகரங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக பல இடங் களில் தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடங்கியது. மரங்கள் சாய்ந்தன.


வங்காள தேசம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரங்கமாட்டி சதார், சிட்டகாங், சந்த்னைஷ், பந்தர்பன் என பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 


குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.இடிபாடுகளில் சிக்கியோரை மீட்பதற்கு அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் தொடர் மழையால் அந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. 


இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 53 பேர் பலியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், பலி எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. அபாயமான பகுதிகளில் வசித்த 4 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.