அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, உலகம் முழுக்க தேடப்பட்ட அல்-கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஓமர், சமீபத்தில் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், அவரது தந்தைக்கு அவருக்குமான உறவு, அவரின் தந்தை அளித்த ஆயுத பயிற்சி, அல்-கய்தாவில் இருந்து வெளியேற்றம், பின் லேடனின் மரணம், அவரின் தற்போதைய வாழ்வு என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.  


நான்காவது மகனான ஓமர்தான், பின் லேடனின் பயங்கரவாத (?) வாரிசாக கருதப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும், தனது வளர்ப்பு நாய் மீது இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 2001 ஏப்ரல் மாதம், பின் லேடனிடம் கூறிவிட்டு அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார். அதாவது, இரட்டை கோபுர தாக்குதலுக்கு சில மாதங்கள் முன்.


41 வயதான ஓமர், தற்போது பிரான்ஸ் நாட்டின் ஓவியராக உள்ளார். அவரின் 67 வயதான மனைவி ஜைனா உடன் வசித்து வரும் அவர், கடந்த கால வாழ்க்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கெட்ட கனவாக நினைத்து மறக்க முயற்சித்து வருவதாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 


இதையும் படிக்க | AQIS & TTP தீவிரவாதிகள் நால்வரை சேர்த்து சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலை புதுப்பித்தது அமெரிக்கா


ஓமர் அளித்த பேட்டியில்,"நான் வெளியேறுவதாக அவரிடம் கூறினேன். என்னை வழியனுப்பி வைத்தார். எனக்கு அந்த உலகம் வேண்டவே வேண்டாம் என்றானது. நான் வெளியேறுவது அவருக்கு பிடிக்கவில்லை. 


எனது வளர்ப்பு நாயின் மீது இரசாயன சோதனைகளை தந்தையின் உதவியாளர் மேற்கொண்டதை நான் நேரில் பார்த்தேன். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த கெட்ட நேரங்களை மறக்கவே நினைக்கிறேந். ஆனால், ரொம்ப கடினமாக உள்ளது. கடைசியில் பாதிக்கப்பட்டது நான்தான்.


நான் வரையும் ஓவியங்கள்தான் என்னை ஆசுவாசப்படுத்துகின்றன. '5 ஆண்டுகள் ஆப்கானில் வாழ்ந்ததற்கு பின்னான மலைகள்' என்ற தலைப்பில் வரைந்த ஓவியம்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஓவியம்தான் என்னை தனித்துவமான நபராக விளங்கவைக்கிறது" என்றார். அவரின் ஒரு ஓவியம் 8,500 பிரிட்டீஷ் பௌண்ட்களுக்கு (சுமார் ரூ. 8.45 லட்சம்) விற்கப்படுவதாக தெரிகிறது. 


1981ஆம் ஆண்டு மார்ச் மாதம், பின் லேடனின் முதல் மனைவி நவ்ஜாவுக்கு பிறந்தவர், ஓமர். இவர் அந்த பேட்டியில் மேலும் கூறியதாவது,"அல்-கய்தாவில் இணைய கூறி எனது தந்தை என்னை வற்புற்தியதே இல்லை. ஆனால், அவரின் பணியை தொடர்ந்து செய்ய அவர் என்னையே அவருக்கு பின்னான வாரிசாக தேர்வு செய்தார். ஆனால், எனக்கு அந்த வாழ்வு பிடிக்கவில்லை. அதனால், அவருக்கு கடும் அதிருப்தி இருந்தது. 


அவர் ஏன் என்னை அவரின் பணி வாரிசாக நினைத்தார் என தெரியவில்லை. ஒருவேளை புத்திசாலி என்பதால் கூட இருக்கலாம். அதனால்தான், நான் இன்று உயிருடன் இருக்கிறேன்.


நான் அவரை வெறுக்கவும் செய்கிறேன்;  விரும்பவும் செய்கிறேன். அவர் எனது தந்தை என்பதால் விரும்புகிறேன், அவர் செய்த காரியங்களுக்காக அவரை வெறுக்கிறேன்" என்றார். 


மேலும், பின் லேடனை பாகிஸ்தானில் புகுந்து அமெரிக்க படைகள் கொலை செய்ததாக அறிவித்த மே 2, 2011 அன்று தான் கத்தாரில் இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், தனது தந்தையை நடுக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறுவதை நம்ப முடியவில்லை என்றும், அதில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


அமெரிக்கர்கள் தனது தந்தையின் உடலை அவர்களது நாட்டிற்கு எடுத்துச்சென்று, மற்றவர்களின் பார்வைக்கு வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். ஒசாமா பின் லேடனின் மகன் ஓமர் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் மனைவி ஜைனா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  


இதையும் படிக்க | இஸ்லாமிய வெறுப்பு உங்களுக்கு விளையாட்டா? - வகுப்பறையில் ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ