AQIS & TTP தீவிரவாதிகள் நால்வரை சேர்த்து சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலை புதுப்பித்தது அமெரிக்கா

Anti-Terrorism: AQIS, TTP பயங்கரவாத அமைப்புகளின் நான்கு தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2022, 09:52 AM IST
  • தீவிரவாதிகளை ஒடுக்கும் அமெரிக்கா!
  • ஆசியாவின் 4 தீவிரவாதிகள் SDGTs பட்டியலில் சேர்ப்பு
AQIS & TTP தீவிரவாதிகள் நால்வரை சேர்த்து சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலை புதுப்பித்தது அமெரிக்கா title=

வாஷிங்டன்: AQIS, TTP பயங்கரவாத அமைப்புகளின் நான்கு தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல்-கொய்தா (AQIS) மற்றும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்றவற்றின் ஒரு பகுதியாக செயல்படும் நால்வரை அமெரிக்கா சர்வதேச தீவிரவாதிகளாக அங்கீகரித்துள்ளது.

அமெரிக்கா தனது முழு பயங்கரவாத எதிர்ப்பு கருவிகளையும் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும். சர்வதேச பயங்கரவாதத்திற்கான தளமாக ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க | Acrobatic Dance: வாடிகனிலும் குதூகல டான்ஸ்! ரசித்து பார்க்கும் போப் வீடியோ வைரல்

இடைவிடாத முயற்சிகள்

நேற்று, அமெரிக்கா, AQIS மற்றும் TTP அமைப்புகளை சேர்ந்த நான்கு பேரை, அந்தந்த குழுக்களில் அவர்களின் தலைமைப் பாத்திரங்களுக்காக, நிர்வாக ஆணை (E.O.) 13224 இன் கீழ் உலகளாவிய பயங்கரவாதிகளாக (SDGTs) அமெரிக்கா அறிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில், அல்-கொய்தா (AQIS)வின் ஒசாமா மெஹ்மூத், ஆட்சேர்ப்பு துறைக்கு பொறுப்பான முஹம்மது மரூஃப் மற்றும் அதிஃப் யாஹ்யா கௌரி என மூவர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடவடிக்கைகள் மற்றும் போராளிகளை மேற்பார்வையிடும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் ஃகாரி அம்ஜத் இந்த பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | பார்கோடு டாட்டூ குத்திக்க ரெடியா? கையை நீட்டினா பணம் வந்து குவிய சூப்பர் வழி

இந்த நடவடிக்கைகளின் விளைவாக, அமெரிக்க அதிகார வரம்பிற்கு உட்பட்ட இடங்களில், இவர்களுக்கு சொந்தமாக உள்ல சொத்துகள் மற்றும் அதில் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் அனைத்துவித பலன்களும் தடுக்கப்பட்டுள்ளன, மேலும் எந்தவொரு அமெரிக்க நபரும் அவர்களுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுவது பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தானில் சர்வதேச பயங்கரவாதிகள் தண்டனையின்றி செயல்பட முடியாது என்பதை உறுதிசெய்வதற்கான அமெரிக்காவின் நிலைப்பாடு என்று அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சர்வதேச பயங்கரவாதிகளின் செயல்பாட்டை வேரறுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும், அதற்கான கருவிகளையும் தொடர்ந்து பயன்படுத்துவோம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கான தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ISISI தீவிரவாதி அபு அல்-ஹசன் அல்-ஹஷ்மி அல்-குரைஷி இறந்தது உறுதியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News