Latest News Indonesian Man Finds Out About His Wife : உலகில், நாளுக்கு நாள் நம்ப முடியாத அளவிற்கு அற்புதமான மற்றும் அற்பத்தனமான வினோதங்கள் நடைப்பெற்று வருகிறது. “படத்தில் கூட இப்படியெல்லாம் நடக்காதே..” என்று சொல்லத்தோன்றும் அளவிற்கு நம்புவதற்கு கடினமான விஷயங்கள் நிஜ வாழ்வில் நடைபெறுகின்றன. அதிலும், வெளிநாடுகளில் நிகழும் வினோதங்கள் இருக்கிறதே, சொல்ல ஆரம்பித்தால் பல நாட்கள் இழுக்கும். அப்படி ஒரு வினோதம்தான், இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவருக்கு இன்று நடைப்பெற்றிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசிய இளைஞர்:


“திருமணம் என்பது பூர்வ ஜென்ம பந்தம்” என நம் ஊரில் பெரியவர்கள் கூறுவதுண்டு. நிகழ்காலத்தில் திருமணத்திற்கான நோக்கங்களும் எண்ணங்களும் மாறிவிட்டாலும், திருமணங்கள் நடைப்பெற்றுதான் வருகின்றன. அப்படி, “தனக்கான துணை ஒருத்தி கிடைத்துவிட்டாள்” என்ற எண்ணத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் சோக கதைதான் இது. 


ஆன்லைனில் பழக்கம்..


இந்தோனேசியாவை சேர்ந்த 26 வயது இளைஞர், ஏகே. 2023ஆம் ஆண்டில் சமூக வலைதளம் ஒன்றின் மூலமாக அடிந்தா கான்சா (Adinda Kanza) என்பவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஆன்லைனில் நட்பாக பழகிய இவர்கள், ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்கலாம் என முடிவெடுத்து சந்தித்தும் உள்ளனர். நேரில் சந்தித்த போதெல்லாம், அடிந்தா கான்சா, இஸ்லாமியர்கள் அணியும் புர்காவை அணிந்து, முகத்தை மறைத்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இது குறித்து பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஏகே, அவரது மதத்தை மதிக்கும் நோக்கில், இதை அவர் அணிந்திருப்பதாக நினைத்து அது குறித்து கேட்காமல் இருந்துள்ளார். 


இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் வளர, திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருக்கின்றனர். அப்போது அடிந்தா,  திருமணத்திற்கு வருவதற்கு தனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், திருமணத்தை சிம்பிளாக வைத்துக்கொள்ள முடிவு செய்த ஏகே, கடந்த ஏப்ரம் மாதம் 12ஆம் தேதி, மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அடிந்தாவை திருமணம் செய்திருக்கிறார். 


செக்ஸிற்கு மறுப்பு!


திருமணம் ஆன பின்பு, ஆசை கணவன் அருகில் வரும் போதெல்லாம் முகத்தையும் உடலையும் மறைத்தே வைத்திருந்தார், அடிந்தா. அது மட்டுமன்றி, தன் கணவரின் குடும்பத்தினர், நண்பர்கள், கிராமத்தில் உள்ளவர்கள் என யாருடனும் பேசாமல் இருந்திருக்கிறார். கணவருடன் உடலுறவு வைக்கவும் மறுத்த அவர், தனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காரணத்தை கூறி தவிர்த்திருக்கிறார். இதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் அந்த அப்பாவி இளைஞர். 


கணவருக்கு ஷாக்!


அடிந்தாவின் செயல்பாடுகளால் சந்தேகம் கொண்ட ஏகே, இது குறித்து ஆராய முடிவு செய்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. அடிந்தா திருமணத்தின் போது தனது பெற்றொர்கள் இறந்து விட்டதாக கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அவரது பெற்றோர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார் ஏகே. அது மட்டுமா? கண்டுபிடித்த பெற்றோரிடம் அவரது மகளை குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு தலையில் பெரிய இடியே விழுந்தது போன்ற விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது. 


மேலும் படிக்க | மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?


அடிந்தா, பெண்ணே இல்லை என்ற விஷயத்தை அவரது பெற்றோர், ஏகேவிடம் கூறியிருக்கின்றனர். அவர், 2020ஆம் ஆண்டு முதல் பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்து (Cross Dressing) தன்னை பெண் என அடையாள படுத்திக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், தங்களின் மகனுக்கு இப்படியொரு உறவு இருப்பதே தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இதை கேட்டு அதிர்ந்து போன ஏகே, சற்றும் தாமதிக்காமல் காவலர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். 


பெண் போல பேச்சு..


ஏகேவின் புகாரை அடுத்து காவலர்கள் விரைந்து வந்து அடிந்தாவிடம் விசாரிக்க வந்துள்ளனர். அப்போது, அவர் பெண் குரலில் பேசியதாகவும், கொஞ்சம் விட்டிருந்தால் காவலர்களே அவர் ஒரு பெண் என நம்பியிருப்பர் என்றும் கூறப்படுகிறது. 


பணத்தை திருட..


இறுதியாக விசாரணையில், ஏகேவின் சொத்துகளை திருடுவதற்காகத்தான் பெண் வேடம் அணிந்து கொண்டு இப்படி நாடகமாடியதாக அடிந்தா கூறியிருக்கிறார். இந்த மோசடி பேர்வழிக்கு 4 வருட ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. 


காதலுக்காக திருமணம் செய்து கொண்டு, இப்போது அந்த திருமண உறவையும் இழந்து பணத்தையும் இழந்து நிற்கிறார், அப்பாவி இளைஞர். இவரின் நிலையை பார்த்தால் பாவமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு.. நடந்தது என்ன?\


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ