Latest News Shortest Wedding In World : “திருமணம் ஆயிரம் காலத்து பயிர்” என பெரியோர்கள் கூற கேட்டிருப்போம். இது, பழங்காலத்திற்கு ஒத்து வந்தாலும், நிகழ் காலத்தில் “ஒத்து போகவில்லை என்றால் விட்டுப்போக வேண்டியதுதான்” என்ற மனநிலைக்கு வந்து விட்டனர் மக்கள். கடந்த காலத்தை போல அல்லாமல் யார் துணையும் இன்றி தங்களால் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டி வருகின்றனர்.கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பதெல்லாம் மலையேறி, இன்று கணவன்மார்கள் தங்களின் வாழ்க்கை துணைக்கு சிறு மரியாதை குறைவுடன் நடந்து கொண்டாலும் அவர்களின் துண்டிப்பை வெட்டி விட்டு, “போனால் போகட்டும் போடா” என அந்த திருமண வாழ்வில் இருந்து நடையை கட்டி விடுகின்றனர் பெண்கள். அது போன்ற ஒரு சம்பவம்தான் தற்போது நடந்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குவைத் ஜோடி:


குவைத் நாட்டை சேர்ந்த தம்பதி, கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போது, மண மேடையில் இருந்து நடந்து வரும் போது, மணப்பெண் கால் இடறியிருக்கிறார். அவருடன் நடந்து வந்து கொண்டிருந்த மணமகன் அவரை “முட்டாள்” (Stupid) என திட்டியிருக்கிறார். இது, மணப்பெண் உள்பட சுற்றியிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 


3 நிமிடங்களில் விவாகரத்து:


திருமணம் முடிந்த கையோடு தன்னை இப்படி மணமகன் திட்டியதை சற்றும் தாங்கிக்கொள்ள முடியாத மணப்பெண், உடனே தனக்கு விவாகரத்து வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் மணப்பெண் ஜாேக் செய்வதாக அனைவரும் நினைக்க, சற்று நேரம் கழித்துதான் தெரிந்திருக்கிறது அந்த பெண் சீரியஸாகவே விவாகரத்து கேட்டிருக்கிறார் என்று.  2019ஆம் ஆண்டில் நடந்து, 3 நிமிடங்களுக்கு விவாகரத்து கேட்ட அந்த பெண்ணை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மக்களுக்கு இது இன்னும் புதுமையானதாகவே இருக்கிறது.


மேலும் படிக்க | உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு.. நடந்தது என்ன?


மக்கள் கூறுவது என்ன?


திருமணம் செய்து வாழ்பவர்கள் பலர், “திருமணம் செய்து கொண்டோமே…” என்ற காரணத்திற்காக மட்டும் அந்த திருமண வாழ்க்கையில் இருக்கின்றனர் என்பது பலருக்கு தெரியும். இருப்பினும், ஒருவருடன் ஒத்து வாழ்வதற்கு அந்த காரணம் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. இன்றும், நம் ஊரில் பல பெண்கள் கணவன் குடித்து விட்டு அடித்தாலும் மிதித்தாலும், பிறருடன் வைத்து சந்தேகப்பட்டாலும் அதை சகித்துக்காெண்டு வாழ்ந்து வருகின்றனர்.


இப்படி, சகித்துக்கொள்பவர்களுக்கும், “அப்படி சகித்துக்கொண்டு போவதுதான் நல்லது” என்று கூறும் பிற்போக்குவாதிகளுக்கும் இந்த பெண் திருமணமான 3வது நிமிடத்தில் விவாகரத்து கேட்டது தவறான விஷயமாக படுகிறது. ஆனால், இந்த விஷயத்தை ஆழ்ந்து யோசிப்பவர்கள், மிக சீக்கிரமாகவே அந்த பெண் விழித்துக்கொண்டதாவும் இனியாவது அவருக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்றும் கூறி வருகின்றனர். “மரியாதையற்ற திருமணம் தவறான திருமண வாழ்க்கைக்கான ஆரம்ப கட்டமாகும். நல்ல வேளை அந்த பெண் ஆரம்பத்திலேயே கிளம்பிவிட்டார்” என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். இது குறித்த விவாதம் இன்னும் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. 


உலகின் மிகக் குறுகிய திருமணம்:


திருமணமாகி 3 நிமிடத்திற்குள் விவாகரத்து கேட்ட இந்த பெண்ணின் திருமணம்தான் தற்போது உலகின் மிகக் குறுகிய திருமணம் என்று கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பெண்கள் விவாகரத்து செய்வதற்கான 4 காரணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ