பெண்கள் விவாகரத்து செய்வதற்கான 4 காரணங்கள்

விவாகரத்து முடிவுக்கு வருவது என்பது பெண்களுக்கு எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்றால், அதற்கான சூழ்நிலைகள் உள்ளன  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 30, 2022, 10:21 AM IST
  • கணவன் மனைவி விவாகரத்துக்கான காரணம்
  • பெண்கள் விவாகரத்து முடிவை ஏன் எடுக்கிறார்கள்?
  • இந்த காரணங்கள் மிக முக்கியமானவை
பெண்கள் விவாகரத்து செய்வதற்கான 4 காரணங்கள்  title=

ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவெடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? என்பதற்கான பொதுவான காரணங்களை தெரிந்து கொள்வோம். 

ஏமாற்றுதல்

எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரியவரும்போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

மேலும் படிக்க | Relationship Tips: மண வாழ்க்கை முறிவுக்கு காரணமான ’அந்த’ 3 தவறுகளை செய்யாதீர்கள்

சுய மரியாதை

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண உறவுகளில் சம உரிமை உண்டு. ஆனால், சுயமரியாதை தொடர்ந்து புண்படுத்தப்படுவதை பெண்கள் விரும்புவதில்லை. இருப்பினும் பல முறை இதனை சரி செய்ய முயற்சி எடுத்தும் பலனளிக்காதபோது விவாகரத்து முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். 

விருப்பம்

பெண்களுக்கு என்று இலக்கும் கனவும் இருக்கும். ஆண்களைப் போலவே அவர்களும் தங்களின் இலக்கை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். அதற்கான சரியான ஒத்துழைப்பு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார். ஒத்துழைப்பும் கொடுக்காமல் கனவுக்கும் கணவர் இடையூறாக இருந்தால், திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள பெண்கள் முடிவெடுக்கிறார்கள். 

மன அமைதி

திருமண பந்தத்தில் மன அமைதி மற்றும் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களின் சுதந்திரத்தில் கணவர் தலையிடும்போது எரிச்சலடைகிறார்கள். இதனால் அவர்களின் மன அமைதி பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். இப்படியான அவதிகள் தொடரும்பட்சத்தில் விவகாரத்து என்ற முடிவை எடுக்க தயங்குவதில்லை. 

மேலும் படிக்க | குழந்தைகளை பாதிக்கும் பெற்றோர்களின் 4 கெட்ட பழக்கங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News