ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இந்த எரிமலை சீற்றத்தை ஹவாய் எரிமலை ஆய்வகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


மேலும் படிக்க | Asteroid Bennu: சிறுகோள் பென்னுவின் ஆச்சரியமான மர்மங்களை அவிழ்க்கும் நாசா



இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, எரிமலைப் பிழம்பைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பதிவிடப்பட்டு 12 மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தக் காட்சியைப் பார்த்துள்ளனர். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததில், 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 


மேலும் படிக்க | Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ