Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு

Reason for Jupiter not having Rings: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? கடந்த காலத்தில் எப்போதாவது அவை இருந்ததா? இந்த புதிரான கேள்விகளுக்கு பதில்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2022, 10:14 AM IST
  • சனி கிரகத்தின் தனித்துவத்திற்கு காரணம் இதுதானா?
  • வியாழனுக்கு ஏன் சனியைப் போல வளையங்கள் இல்லை
  • சனி வளையத்தின் காரணம் என்ன?
Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு title=

Planet and their Rings: நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் இருந்து சனியை வேறுபடுத்துவது அந்த கிரகத்தில் உள்ள கம்பீரமான வளையங்கள் ஆகும். சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, சனியின் வளையங்களை அமெச்சூர் தொலைநோக்கிகளிலிருந்தும் பார்க்கலாம். அரசர்களுக்கு கிரீடம் போல, சனி கிரகத்திற்கு அதன் வளையங்கள் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஆனால் பிற கிரகங்கள் அனைத்திற்கும் சனியைப் போன்ற வளையஙக்ள் இல்லை?

இப்படி பல விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் எழுகின்றன. சனி நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரிய கிரகம் என்ற பதிலும் சரியானதாக இருக்காது. ஆனால் வியாழன் கிரகம் சனியை விட பெரியது, அதற்கு ஏன் சனி போன்ற வளையங்கள் இல்லை?

மேலும் படிக்க | சனீஸ்வரரின் கடைக்கண் சிரிப்பால் முகம் மலரும் மூன்று முத்தான ராசிகள்

சனியின் வளையங்கள் தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு (UCR) சமீபத்தில் நடத்திய ஆய்வில், சனி போன்ற வளையங்கள் வியாழனுக்கு ஏன் இல்லை என்பதற்கான காரணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் Planetary Science சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

UCR வானியற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் கேன் தனது மாணவருடன் சேர்ந்து ஆய்வுக்கு தலைமை தாங்கினார். இந்த ஆய்வில், அவர்கள் ஒரு உருவகப்படுத்துதல் வழிமுறைகளை பின்பற்றினார்கள். அவர்கள் வியாழனின் நான்கு நிலவுகளின் சுற்றுப்பாதைகள் மற்றும் கிரகத்தின் சுற்றுப்பாதை பற்றிய தகவலை அளித்தனர்.

கிரகத்தைச் சுற்றி வளையங்களை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது பற்றிய தகவல்களையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வுகள் மேலும் பல கிரகங்கள் தொடர்பான செய்திகளையும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா?

வியாழனால், சனி கிரகத்திற்கு இருப்பது போன்ற சந்திரனை உருவாக்க முடியாததற்கு அதன் நிலவுகளே காரணம் என்று கேன் கண்டுபிடித்தார். வியாழனுக்கு நான்கு நிலவுகள் உள்ளதாக கலிலியோ கண்டறிந்தார்.

வியாழனின் கலிலியன் நிலவுகளில் ஒன்று நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய நிலவு. இது, உருவாகக்கூடிய எந்த பெரிய வளையங்களையும் மிக விரைவாக அழிக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், வியாழனுக்கு ஏன் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்பு எப்போதுமே, சனி கோளுக்கு இருப்பது போன்ற வளையங்கள் வியாழனுக்கு இருந்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம்.

மேலும் படிக்க | விண்வெளியில் காந்தப்புயல்; SpaceX அனுப்பிய 40 செயற்கோள்கள் சேதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News