‘எல்லாமே அலர்ஜி என்றால் எப்படித் தான் வாழ்வது’; இளம் பெண்ணின் பரிதாப வாழ்க்கை
குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என அனைத்தும் அலர்ஜி என்றால், வாழ்க்கை மிகவும் கடினமாகி விடும். அப்படிப்பட்ட நரகமான வாழ்க்கையை வாழும் ஒரு பெண் தினம் தினம் உயிருக்கும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் ஒரு நர்சுக்கு எல்லாமே அலர்ஜியாகி விட்டது. குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என அனைத்தும் அலர்ஜி. வெந்நீரில் குளித்தாலும் அவளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில், சாண்ட்விச் ஒன்று அவரை மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று விட்டது. சாண்ட்விச் சாப்பிட்ட பிறகு அந்தப் பெண்ணுக்கு மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் பல முறை ஒவ்வாமை காரணமாக தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு காப்பாற்றப்பட்டதாக அந்த பெண் கூறுகிறார்.
அசாதாரணமான வாழ்க்கை
கிழக்கு சசெக்ஸில் வசிக்கும் 26 வயதான மியா லின்ச்பரியின் (Mia Lainchbury) வாழ்க்கை சாதாரண மக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என 'மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எதை சாப்பிடுவது, எதை குடிப்பது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரே ஒரு தவறு அவர்களின் உயிரைப் பறிக்கும். மியாவுக்கு பொதுவாக ஃபீடிங் ட்யூப்பில் இருந்துதான் உணவு வழங்கப்பட்டாலும், சில நாட்களுக்கு முன்பு சாண்ட்விச்களைப் பார்த்த அவருக்கு சாப்பிடும் ஆசை தோன்றியது.
ALSO READ | பைடன் - கமலா ஹாரீஸ் இடையே மோதல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
குழந்தை பருவத்திலிருந்தே ஆஸ்துமா பிரச்சனை
மியா தன் காதலனுடன் வெளியில் செல்லும் போது, வழியில் சாண்ட்விச் சாப்பிட்டது அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மியாவுக்கு சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. இது தவிர பல நோய்களுடன் போராடி வருகிறார். உதாரணமாக, அவருக்கு குடல் பிரச்சனையும் உள்ளது, இதன் காரணமாக அவரது குடலின் ஒரு பகுதி டெலஸ்கோப்பிங் செயல்பாட்டின் (Telescoping Action ) மூலம் இயக்கப்படுகிறது. இதனுடன், அவர் மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் (Mast Cell Activation Syndrome) என்னும் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆண்டிபயாடிக்ஸால் சிக்கல்கள்
அரசு மருத்துவமனைகளில் தனது நோய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என அவர் நினைப்பதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பணம் திரட்டி வருகிறார்.'என் உடல் நிலைமையால் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். மரணம் எப்போது வரும் என்று எனக்கே தெரியாது’ என வருத்தத்துடன் கூறுகிறார். அவர் செப்டம்பரில் ஆண்டிபாயாடிக் எடுத்துக் கொண்டதும் அலர்ஜியாகி, மிகவும் அவதிப்பட்டார். அவர் உடலில் என்ன எதிர்வினை ஏற்படும் என்று கணிக்கவே முடியாமல் திணரும் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அவருக்கு ஒவ்வாமை இருக்கிறது.
'மெழுகுவர்த்தியைக் கூட ஏற்ற முடியாது'
மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றி வைக்க முடியாது, ஏனெனில் அதுவும் ஒவ்வாமை என்று பயிற்சி செவிலியர் மியா வருத்தத்துடன் கூறுகிறார். இது தவிர, வாஷிங் பவுடர் மற்றும் வெந்நீர் உபயோகிப்பதும் அவரது உயிருக்கு ஆபத்தாய் முடியும். பல முறை அவருக்கு CPR செலுத்த வேண்டியிருந்தது. மியாவின் பெற்றோர்களும் அவள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பதால், பணம் திரட்டி வருகிறார் மியா.
ALSO READ | 85 நிமிடங்கள் அமெரிக்காவின் அதிபர்- கமலா ஹாரீஸூக்கு கிடைத்த கௌரவம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR