இந்தோனேசியாவில் நடுவானில் மாயமான விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 


 



 


இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 


இன்று காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஜக்ர்த்தா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, ஜேடி-610 பயணிகள் விமானம் காணாமல் போனதாக அறிவித்தது. அந்த விமானத்தில் மொத்தம் 189 பயணிகள் இருந்தது தெரியவந்துள்ளது. 


இந்நிலையில் தற்போது இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.