லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டோருக்குத் துணைநிற்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிஸ் நகரின் ஈஃபிள் டவர் மின்விளக்குகள் இன்று இரவு அணைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பார்லிமென்ட் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநிற்கும் விதமாக, 'இன்று இரவு ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள்  அணைக்கப்படும்' என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.