கடந்த 28 ஆண்டுகளாக பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்சை பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் நீக்கிய மருத்துவர்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் கண்ணில் வீக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்களை அணுகியுள்ளார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்தப் பெண்ணின் இடது கண்ணில் சுமார் 8 மி.மீட்டர் அளவுள்ள காண்டாக்ட் லென்ஸ் பதிந்திருந்தது. 


இதையடுத்து அந்த பெண்ணிடம் மருத்துவர்கள் கேட்டதற்கு, ``சிறு வயதில் இருக்கும் போது லென்ஸ் பயன்படுத்தினேன். அப்போது ஒரு நாள் விளையாடும்போது கண்ணில் அடிபட்டபோது லென்ஸ் கீழே விழுந்து விட்டது என்று நினைத்தேன்" எனக் கூறியுள்ளார். மேலும், சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது என்றும், அதன்பிறகு லென்ஸ் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


சுமார் 28 ஆண்டுகளாகக் அந்த லென்ஸ் கண்ணிலேயே சிக்கியிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணில் லென்ஸ் சிக்கியிருப்பதற்கான எந்தவிதமான வலியோ, அறிகுறியோ இதுவரை ஏற்படாமல் இருந்துள்ளது. 



இதையடுத்து, அப்பெண்ணுக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ் நீக்கப்பட்டுள்ளது. தற்போது பார்வை பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய வம்வசாவளியைச் சேர்ந்த மருத்துவர் சர்ஜூன் பாட்டில் என்பவர் வெளியிட்டுள்ளார்.