வீட்டில் கிடைத்த ‘அரிய’ புதையல்; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன தம்பதி!
ஒரே இரவில் சாம்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் தலைவிதி மாறியது. வீட்டில் கிடைத்த புதையல் அவர்களை கோடீஸ்வரர்களாக்கியது.
உங்கள் வீட்டில் புதையல் ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும் இல்லையா. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பார்கள். இங்கே, பூமியில் இருந்து புதையலாக கிடைத்துள்ளது. கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு நிஜ வாழ்க்கையில் புதையல் கிடைத்து கோடீஸ்வரர்கள் ஆன சமப்வம் நடந்துள்ளது.
வீட்டைப் பழுதுபார்க்க எடுத்த முடிவு அதிர்ஷ்டத்திற்கான ஆதாரமாக மாறியது. இந்த விவகாரம் பிரிட்டனில் நடந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் பழுது பார்க்கும் பணியை ஆரம்பித்தனர். இதற்கிடையில், அவரது சமையலறையின் தரையின் டைல்களை மாற்றும் போது அதன் அடியில் இருந்து அவருக்கு ஒரு புதையல் கிடைத்தது. எதிர்பாராமல் கிடைத்த அந்த புதையலால், அவர்கள் இன்ப அதிர்ச்சியை அடைந்தனர்.
வீட்டில் கிடைத்த பழைய நாணயங்கள்
தம்பதியினர் தங்கள் வீட்டின் சமையலறை தளத்தின் அடியில் இருந்து 264 தங்க நாணயங்களை கண்டுபிடித்தனர். இந்த நாணயங்கள் 300 வருடங்கள் பழமையானவை. இதனால் இந்த தம்பதிகள் கோடீஸ்வரர்களாக ஆனார்கள். இந்த நாணயங்கள் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் ஆட்சி காலத்தைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரயிலில் 'அந்தரங்க சேவை' - டிக்கெட்டை பார்த்த பயணி அதிர்ச்சி; என்ன நடந்தது?
ஏலம் மூலம் கோடீஸ்வரர் ஆன தம்பதி
வீட்டில் கிடைத்த பழங்கால அரிய காசுகள் அனைத்தையும் சுமார் 6 கோடியே 92 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்றதாக கூறப்படுகிறது. ஜோசப் ஃபார்ன்லி மற்றும் அவரது மனைவி சாரா மாஸ்டர் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் அதிர்ஷ்டம் அவர்களை ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக்கியது அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களின் உரிமையாளராகவும் எஜமானியாகவும் ஆனார்கள். வீட்டில் புதையலாக கிடைத்த நாணயங்கள் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தன
நொடியில் மாறிய அதிர்ஷ்டம்
இந்த ஜோடி ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் சில குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாணயங்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன. தம்பதியருக்கு கிடைத்த பணம் அவர்களது விதியை மாற்றியது. அவர்களால் இதனை நம்ப முடியவில்லை. எளிமையான தோற்றமுடைய இந்த அரிய நாணயங்கள் ஒரு தம்பதியின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ